Cinema
விஜய் சேதுபதி, கார்த்தி, யுவன், பிரியாமணி என 201 பேருக்கு கலைமாமணி விருது: நிறைவுற்றது 8 ஆண்டு போராட்டம்!
தமிழ் திரைப்படம், கலை, இலக்கியம், நாடகம், இசை உள்ளிட்ட துறைகளில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு தமிழக அரசினால் ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் கலைமாமணி விருது 1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 8 ஆண்டுகளாக இதற்கான எந்த நடவடிக்கையிலும் ஆட்சியில் இருந்து வரும் அ.தி.மு.க அரசு ஈடுபடவில்லை. இந்நிலையில், சமீபத்தில் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு.
அதன்படி, 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுவோர் பட்டியல் கொண்ட விவரங்கள் வெளியிடப்பட்டது.
2011: லேனா தமிழ்வாணன், கோவி.மணிசேகரன் (இயற்றமிழ்), அபஸ்வரம் ராம்ஜி (மெல்லிசை), நடிகர்கள் ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ், நகைச்சுவை நடிகர் பாண்டு, நடிகை குட்டி பத்மினி, புலியூர் சரோஜா (திரைப்பட நடன இயக்குநர்). சசிரேகா (பாடகி) உள்ளிட்ட 30 கலைஞர்கள்.
2012: மகாநதி ஷோபனா, நடிகைகள் ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி, இயக்குநர் & நடிகர் சித்ரா லட்சுமணன், கானா உலகநாதன் உள்ளிட்ட 30 பேர்.
2013: நடிகர் பிரசன்னா, இயக்குநர், நடிகர் பாண்டியராஜன், நடிகைகள் நளினி, பழம்பெரும் நடிகைகள் குமாரி காஞ்சனா, சாரதா, காமெடியன் டி.பி.கஜேந்திரன், பரவை முனியம்மா உள்ளிட்ட 30 பேர்.
2014: நடிகர்கள் கார்த்தி, சரவணன், பொன்வண்ணன், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாடகி மாலதி, நடன இயக்குநர் தாரா மாஸ்டர், மூத்த பத்திரிகையாளர் நியூஸ் ஆனந்தன் உள்ளிட்ட 30 பேர்.
2015: நடிகர் பிரபுதேவா, விஜய் ஆண்டனி, கானா பாலா, இயக்குநர் பவித்ரன், பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, நாடக நடிகர் மாது பாலாஜி உள்ளிட்ட 20 பேர்.
2016: நடிகர்கள் சசிகுமார், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர். காமெடியன் சூரி, பத்திரிகையாளர் நெல்லை சுந்தரராஜன் உள்ளிட்ட 20 பேர்.
2017: நடிகர் விஜய் சேதுபதி, சிங்கமுத்து, நடிகை பிரியாமணி, காமெடியன் சிங்கமுத்து, இயக்குநர் ஜி.ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட 28 பேர்
2018: நடிகர்கள் ஸ்ரீகாந்த், சந்தானம், பாடகர் உன்னி மேனன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மருத்துவ நூல் ஆசிரியர் டாக்டர் அமுதகுமார் உள்ளிட்ட 34 பேருக்கு கலைமாமணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கிய கலைமாமணி விருதுகள் வழங்கும் விழாவில் கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும், தங்கப் பதக்கத்தையும், காசோலையையும், சான்றிதழையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
திரைக்கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் என 201 பேருக்கு வழங்கப்பட்ட இந்த கலைமாமணி விருதுகள் வழங்கும் விழாவில் சபாநாயகர் தனபால், தமிழக அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!