Cinema
யூ-ட்யூப் விமர்சகர்களுக்கு ‘தடா’? : தமிழ் தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் இணைந்து நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனை நடத்தி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவையாவன :
* பட பூஜை, ஆடியோ வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்தவொரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்தவிதமான அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது.
* சினிமா விழாக்களில் கலந்துகொள்ளும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேநீர், ஸ்நாக்ஸ் மட்டுமே வழங்கப்படும்.
* விமர்சனம் என்ற பெயரில் திரைப்படங்களை, கலைஞர்களை வரம்பு மீறி தரக்குறைவாக விமர்சிக்கும் எந்த ஒரு நபரையும் தமிழ் சினிமா சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பது இல்லை. மேலும், அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“பெரியார் அறிவுலகம்.. திறந்து வைப்பதில் என்ன பெருமை.. உருவாக்குவதில்தான் பெருமை”: மு.க.ஸ்டாலின் அறிக்கை!
-
விஜய்யின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? : தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி!
-
மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
-
“மதத்தைக் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது !” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!