Cinema
நடிகர் சங்கத் தேர்தல் : வாக்குகளை எண்ண அனுமதியளிக்க உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டதை எதிர்த்தும், வாக்குகளை எண்ணக் கோரியும் நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக, பதிவாளர் உத்தரவுக்கு எதிரான விஷாலின் வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என்றும், வாக்குப்பெட்டிகளை பாதுகாத்து வைக்கவும் ஜூன் 21ம் தேதியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது, இந்த வழக்கில் ஜெயமணி, சுமதி, சாந்தி உள்ளிட்ட 10 நடிகர் சங்க உறுப்பினர்கள் வழக்கில் இணைக்கக் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அனுமதி அளித்த நீதிபதி 12ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதற்கிடையில் பதிவான வாக்குகளை எண்ணக் கோரிய விஷாலின் மனுவை ஏற்க நீதிபதி ஆதிகேசவலு மறுத்துவிட்டார்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!