Cinema
நிறைவடைந்தது நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு !
நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் நாசர் தலைமையின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.
நடிகர்கள் விஷால், கே.பாக்யராஜ், நாசர், ஆர்யா, சிபி, பாண்டியராஜன், பிரசாந்த். உதயா, சூர்யா, விஜய், ஆசியா. கவுன்டமணி, செந்தில், சந்தானம், நாசர், ராம்கி, சாந்தனு, பொன்வண்ணன், சார்லி, சுந்தர்.சி, ரமேஷ் கண்ணா, ராஜேஷ், சின்னி ஜெயந்த், மனோபாலா, விதார்த், அருண்பாண்டியன். நடிகைகள் குஷ்பு, சங்கீதா, சரண்யா, வடிவுக்கரசி, ஆர்த்தி, கோவை சரளா, காயத்ரி, குட்டி பத்மினி, கே.ஆர்.விஜயா, லதா, அம்பிகா, ராதா, ஷீலா உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் வாக்கு பதிவு செய்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 1579 பேர் இதுவரை வாக்குகளை பதிவு செய்தனர். 85 சதவிகித வாக்குகள் இதுவரை பதிவாகியிருக்கிறது.இந்த வாக்குப்பதிவுகள் பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!