Cinema
‘அவதார்’ சாதனையை முறியடிக்க ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படக்குழு தீட்டியுள்ள மாஸ்டர் ப்ளான்!
காமிக்ஸ் கதைகளை மையமாக வைத்து சூப்பர் சீரிஸ் படங்களை உருவாக்கியுள்ளது ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம்.
அதில், அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்தப் படம், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அந்தந்த பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் ரசிக்கப்பட்டது. அவெஞ்சர்ஸ் படத்தின் முக்கிய கதாபாத்திரமான அயர்ன் மேன் எண்ட்கேம் படத்தில் உயிரிழந்தது இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இன்றளவும், பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம், வசூலில் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் பட வசூலை முறியடிக்கும் நிலையில் உள்ளது. இதுவரை 2.745 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்.
ஆனால், 2.786 பில்லியன் டாலர் வசூலித்து, உலக அளவில் முதல் பத்து வசூல் சாதனைபடைத்த படங்களில் அவதார் படம் 10 ஆண்டுகளாக முதலில் உள்ளது. தற்போது இதன் சாதனை முறியடிக்கும் நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் உள்ளது.
இந்த நிலையில், அவதார் சாதனையை முறியடிக்க 38 பில்லியன் டாலர் தேவையுள்ளதால், மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் புது உத்தியை மேற்கொள்ள உள்ளது.
அதாவது, எண்ட்கேம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை இணைத்து மறுபடியும் வெளியிட இருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அப்டேட் செய்யப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் விரைவில் வெளிவர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அறிந்த மார்வெல் ரசிகர்களும், நெட்டிசன்களும் இணையத்தில் மீம்ஸ்களை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!