Cinema
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தியாகராஜான் குமாரராஜவின் சூப்பர் டீலக்ஸ்!
ஆரண்ய காண்டம் திரைப்படம் வெற்றி அடைந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் மிஷ்கின், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரையரங்குகள் மட்டுமில்லாமல் சூப்பர் டீலக்ஸ் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அந்த வகையில், கொரியாவில் உள்ள போய்ஷன் என்ற நகரில் BIFAN (போய்ஷன் சர்வதேச திரைப்பட விழா) விழா ஜூன் 27 முதல் ஜூலை 7ம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்த திரைப்பட திருவிழாவில் தமிழில் வெளியான தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படம் திரையிடப்பட இருக்கிறது. இது, வேர்ல்ட் ஃபெண்டாஸ்டிக் ப்ளூ என்ற பிரிவில் திரையிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவில் அந்தாதுன், மணிகாமிகா, ரன்வீர் சிங்கின் கல்லி பாய் ஆகிய இந்திய திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கிறது.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!