Cinema
பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான் !
பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். மேலும் நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமாகி இருந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து சமீபத்தில் விலகினர். இதையடுத்து, படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜிப்ரான் பின்னணி இசையை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாடல்களுக்கு வேறு சில இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் சுகந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
Also Read
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!