Cinema
மொக்கை போடும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ : கடைசி சீசனை மீண்டும் எடுக்க ரசிகர்கள் வேண்டுகோள்!
உலகம் முழுக்க சக்கைப்போடு போட்டுவரும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வாராவாரம் பரபரப்போடு வெளியாகும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் இந்த ஆண்டோடு நிறைவடைய இருப்பதால் இந்த சீசன் எதிர்பாராத திருப்பங்களோடு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இல்லாமல், இந்த சீசனில் இதுவரை வெளியான எபிஸோடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. பாத்திரப் படைப்புகள் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடைசி 2 எபிஸோடுகள் ரசிகர்களை வெகுவாக ஏமாற்றத்திற்குள்ளாக்கின.
இந்நிலையில், இந்த சீசனை மீண்டும் எடுக்கவேண்டும் என ரசிகர்கள் எச்பிஓ நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். Change.org எனும் இணையதளம் மூலம் ஆன்லைன் மனு ஒன்றில் கையெழுத்திட்டு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் எச்பிஓ நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளனர்.
ஆர்.ஆர். மார்ட்டின் எழுதிய கதையை மையமாக வைத்து டேவிட் பெனிஃப் மற்றும் டி.பி வெய்ஸ் ஆகியோர் இந்த சீசனுக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். அவர்கள் இருவருக்குப் பதிலாக வேறு யாரையாவது பயன்படுத்தி கடைசி சீசனுக்கான திரைக்கதையை எழுதவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!