Cinema
நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் - நடிகர் சங்க தலைவர் நாசர் பேட்டி !
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாசர், பொன்வண்ணன்,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகப் பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று நாசர் கூறினார். ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமிக்க கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் , பதவிக்காலத்திற்குள் சங்கக் கட்டிடத்தை கட்டி முடிக்கவேண்டும் என்பது குறிக்கோளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
"தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிப்பார். நாளை முதல் தேர்தல் பணி தொடங்குகிறது" - துணை தலைவர் பொன்வண்ணன் கூறினார். அடுத்த தேர்தலிலும் இதே குழு போட்டியிடும் என்றும் நாளை மறுநாள் தேர்தல் அதிகாரியை முடிவுசெய்வோம் எனவும் பொன்வண்ணன் தெரிவித்தார் ."
கட்டிடத்தை முழுமையாக்குவதற்கு போதுமான நிதி இல்லை, 9 மாததிற்குள் கட்டிடப்பணி நிறைவடையும் . பல்வேறு தரப்பில் ஒப்புதல் பெற்று கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றதும் கட்டிடத்தை நிறைவு செய்வதற்கு நிதி திரட்டப்படும். " என்று பொன்வண்ணன் கூறினார்.
மேலும் இந்த செயற் குழு கூட்டத்தில் மறைந்த நடிகர் ரித்தீஷூக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி மற்றும் பொது செயலாளர் விஷால் இந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிட தக்கது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!