Cinema
நடிகர் சங்கத் தேர்தல் பற்றி முடிவெடுக்க நாளை கூடுகிறது செயற்குழு!
நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்காக தேர்தல் 6 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
அந்த அவகாசம் அடுத்த மாதத்துடன் முடிவடையும் நிலையில், வரும் ஜூன் மாதம் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு ஆகிய தேதிகளையும் தேர்தலை எந்த இடத்தில் நடத்துவது என்பதையும் செயற்குழுவில் முடிவுசெய்து அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையில் தற்போதைய நிர்வாகிகள் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இவர்களுக்குப் போட்டியாக ராதாரவி தலைமையில் எதிரணி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!