Cinema
சிம்பு, கெளதம் கார்த்திக் இணையும் புதிய படம்...! இது ‘சிம்பு 45’ அப்டேட்
இந்த வருடம் சிம்புவுக்கு வெளியான படம் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’. இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் ‘மாநாடு’ படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஏனெனில், உடல் எடை குறைக்க, வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார் சிம்பு. அவர் சென்னை திரும்பியதும் ‘மாநாடு’ ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
சமீபத்தில் ஹன்சிகா நடித்துவரும் ‘மகா’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் சிம்பு.
அடுத்தக் கட்டமாக சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்று குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் சிம்புவுடன் கெளதம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இது சிம்புவின் 45வது படம்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்துக்கு மதன்கார்க்கி வசனம் எழுதுகிறார். இதில் சிம்பு நிழலுலக ரவுடியாகவும், கெளதம் கார்த்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறாராம். கன்னடத்தில் வெளியன முஃப்தி படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!