Cinema
விஜய் படத்தில் இணைந்த பாலிவுட் பாட்ஷா
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63ஆவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, கதிர், விவேக் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
அண்மையில், தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார். தற்போது, காசிமேடு பகுதியில் உள்ள கடற்கரை ஏரியாவில் விஜய், நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் பாலிவுட்டின் கிங் காங் என்றழைக்கப்படும் ஷாருக்கான் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார். அதுவும், சிறப்பு தோற்றம் என்றே கூறப்படுகிறது. இவரைப் போன்று ஞானசம்பந்தமும் விஜய் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!