Cinema
கன்னடத்திற்கு செல்லும் பரியேறும் பெருமாள்
அறிமுக இயக்குநர் மாரிசெல்வராஜின் படைப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்'. இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.இதில், கதிர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். தவிர, யோகிபாபு, லிஜீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.சமூகத்தில் நிலவும் சாதி அவலங்களை உரையாடும் சிறந்த படமாக இப்படம் அமைந்தது.விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப்படம் இப்பொழுது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இந்தப் படத்தை காந்தி மணிவாசகம் இயக்கவிருக்கிறார்.இவர், தமிழில் வெளியான 'களவாணி மாப்பிள்ளை' படத்தை இயக்கியவர்இந்தப்படத்திற்கு புதுமுக நடிகர் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடி அலைந்தார். இறுதியாக மைத்ரேயா என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறார்.இவர், ஏவிஎம் குடும்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் பகுதிகளிலும், வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்று வருகிறார்.கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்யும் வேலை நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் துவக்கவிழா நடைபெறவிருக்கிறது.
Also Read
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!
-
கரூர் துயர சம்பவம் : அவதூறு பரப்பிய Youtuber மாரிதாஸ்... கைது செய்த போலீஸ்!