Cinema
அட்லீ விஜய் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'சர்கார்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தவிர, கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். 'சர்கார்' படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார், பாடலாசிரியர் விவேக்.இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக ஒரு பெரிய பிரபலம் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அந்த கேரக்டரில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் படத்தில் சிங்கப் பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஜாக்கி ஷெராப். சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!