Cinema
பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் ஹீரோவாகும் மெட்ராஸ் ஜானி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாராப்பாளரானார். நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.
இந்தப் படத்தை அடுத்து தனது இயக்கத்தில் அட்டகத்தி படத்தில் நடித்த தினேஷ் ஹீரோவாக நடித்து வரும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்தப் படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார். படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பா.ரஞ்சித் தயாரிக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில், ‘மெட்ராஸ்’ படத்தில் ஜானியாக நடித்த ஹரிகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஒருவர் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘கபாலி’, ‘சண்டக்கோழி 2’, ‘வடசென்னை’ ஆகிய படங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹரிகிருஷ்ணன்.
Also Read
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!
-
கரூர் துயர சம்பவம் : அவதூறு பரப்பிய Youtuber மாரிதாஸ்... கைது செய்த போலீஸ்!