உலகம்

உலகெங்கும் பரவும் திராவிட மாடல் : கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்!

கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் பரவும் திராவிட மாடல் : கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அறிவித்தது. பின்னர் இந்த திட்டத்திற்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 15-9-2022 அன்று அண்ணா பிறந்தநாளில் இந்த திட்டத்தை மதுரையில் ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

முதல் கட்டமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1,545 பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பின்பு 28-2-2023 அன்று இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு, 1,005 நகர்ப்புற மையங்களில் 1,12,883 மாணவர்களுக்கும், 963 கிராமப்புற மையங்களில் 41,225 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள 31,008 அரசு பள்ளிக்கூடங்களிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் பசிப் பிணியை போக்கும் கருணை திட்டமாக அமைந்துள்ளது. இந்த மகத்தான திட்டத்தை பல்வேறு மாநில அரசுகளும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டமான காலை உணவு திட்டம் உலகெங்கும் பரவ தொடங்கியுள்ளது. கனடா நாட்டில் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 4 லட்சம் குழந்தைகளுக்கு உணவை வழங்குவதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கனடாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ X தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”குழந்தைகள் நன்கு கற்க, அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories