உலகம்

பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு... புது மன்னர் நியமிக்கப்படுவாரா ?

பிரிட்டன் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு... புது மன்னர் நியமிக்கப்படுவாரா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான அரச குடும்பம் என்றால் அது பிரிட்டன் அரச குடும்பம்தான். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை காலனியாதிக்கம் செய்துவந்த அந்த பேரரசு சூரியன் மறையாத நாடு என்னும் பெயரை பெற்றது. அந்த அளவு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரிட்டனுக்கு காலணிகள் இருந்தது/.

20ம் நூற்றாண்டின் இறுதியில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நாடுகள் தனி நாடுகளாக பிரிந்தாலும் அதில் பல்வேறு நாடுகளுக்கு மன்னராக பிரிட்டன் மன்னரே இருந்து வருகிறார். பிரிட்டன் ராணியாக இருந்த எலிசபெத் சில நாட்களுக்கு முன்னர் மரணடைந்தார்.

அதைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனால், சார்லஸ் பதவியேற்கும் போது, அந்நாட்டு குடிமக்கள் சிலர் பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிராக குரல் எழுப்பி கையில் "என் அரசனில்லை" (புதிய அரசர் சார்லசை ஏற்கமறுத்து) என்ற பதாகைகளையும் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Prince William
Prince William

இந்த நிலையில், பிரிட்டன் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயின் சரியான தன்மை தொடர்பான தகவல்கள் எதுவும் வழங்கப்படாவிட்டாலும், பாதிப்பிற்கான "வழக்கமான சிகிச்சையை" மன்னர் தொடங்கினார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

ஒரு வேலை மன்னர் சார்லஸ் புற்றுநோயால் செயல்படமுடியும் போகும் பட்சத்தில் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம் பிரிட்டனின் அடுத்த மன்னராக பொறுப்பேற்பார் என்ற பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories