உலகம்

விபத்தில் சிக்கிய ரஷ்ய ராணுவ விமானம் : 65 பிணைக்கைதிகள் நிலை என்ன ? ஏவுகணையால் தாக்கப்பட்டதாக புகார் !

ரஷ்யாவின் சிறையில் இருந்த 65 உக்ரைன் பிணைக்கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் சிக்கிய ரஷ்ய ராணுவ விமானம் : 65 பிணைக்கைதிகள் நிலை என்ன ? ஏவுகணையால் தாக்கப்பட்டதாக புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தொடவுள்ள நிலையில், தற்போதும் இந்த போர் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. இந்த போரில் ஏராளமான உக்ரைன் வீரர்களை ரஷ்யா பணயக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளது.

விபத்தில் சிக்கிய ரஷ்ய ராணுவ விமானம் : 65 பிணைக்கைதிகள் நிலை என்ன ? ஏவுகணையால் தாக்கப்பட்டதாக புகார் !

இப்படி பிடித்துவைத்த கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்தில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் உக்ரைன் பிணைக்கைதிகளை விடுவிக்க இருதரப்பிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்திய சிறையில் இருந்த 65 உக்ரைன் பிணைக்கைதிகளை ஏற்றிக்கொண்டு ராணுவ விமானம் ஒன்று சென்றுள்ளது.

இந்த விமானம் போர் பிராந்தியத்தின் அருகே பறந்துகொண்டிருந்த நிலையில், கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் உக்ரைன் பிணைக்கைதிகள் 65 பேர் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 74 பேர் பயணம் செய்த நிலையில், அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து ரஷ்ய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கு காரணமாக இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories