உலகம்

பஞ்சம், நோய்த்தொற்றால் உயிரிழக்கும் காசா குடிமக்கள் : ஐ.நா இயக்குநரின் கருத்தால் அதிர்ச்சி !

பஞ்சம் மற்றும் நோய்த்தொற்றால் ஏராளமான காசா மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சம், நோய்த்தொற்றால் உயிரிழக்கும் காசா குடிமக்கள் : ஐ.நா இயக்குநரின் கருத்தால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 23 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

பஞ்சம், நோய்த்தொற்றால் உயிரிழக்கும் காசா குடிமக்கள் : ஐ.நா இயக்குநரின் கருத்தால் அதிர்ச்சி !

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவின் 80 % மக்கள் இடம்பெயர்ந்து அகதிகள் முகாம்களில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பஞ்சம் மற்றும் நோய்த்தொற்றால் ஏராளமான் காசா மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்துப் பேசியுள்ள உலக உணவு திட்டத்தின் இயக்குநர் சிண்டி மெக்கெய்ன், “காசாவுக்கு செல்லும் உணவுப்பொருள்களை எடுத்துச்செல்ல அதிக நேரம் ஆகிறது. இதற்கு உணவு எடுத்துச்செல்லும் பகுதிகள் குறைவாக இருப்பதும், சோதனையிட அதிக நேரம் எடுத்து கொள்வதும் காரணமாக இருக்கிறது.

இதனால் சில மைல் தூரத்தில் உணவு பொருள்கள் இருந்தும் மக்கள் பட்டினியால் தங்கள் உயிரை இழக்கும் நிலை ஏற்படுகிறது. பட்டினியில் உள்ள மக்கள் உணவு பொருள்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை வழிமறிக்கும் நிலையும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories