உலகம்

முன்னெச்சரிக்கையின்றி நீக்கப்பட்ட ஊழியர்கள்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்.. சிங்கப்பூரில் அதிர்ச்சி !

சிங்கப்பூரில் உள்ள அலிபாபா குழுமத்தின் லாசாடா மின்னணு வர்த்தக நிறுவனம் தனது பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

முன்னெச்சரிக்கையின்றி நீக்கப்பட்ட ஊழியர்கள்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்.. சிங்கப்பூரில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது.

இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது.சில சிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. கொரோனா பேரழிவைத் தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்தது.

அதன் வெளிப்பாடாக ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களை 11000 பேரை நீக்குவதாக அறிவித்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் நிறுவனமும் 12,000 பேரை பணிநீக்கம் செய்தது. அடுத்ததாக கூகுள் நிறுவனத்தில் 30,000 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என தகவல் வெளியானது.

முன்னெச்சரிக்கையின்றி நீக்கப்பட்ட ஊழியர்கள்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்.. சிங்கப்பூரில் அதிர்ச்சி !

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள அலிபாபா குழுமத்தின் தென்கிழக்கு ஆசியப் பிரிவான லாசாடா மின்னணு வர்த்தக நிறுவனம் தனது பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. எந்த வித முன் அறிவிப்பும் இன்றி, ஊழியர்கள் தங்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாக பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரம் தனது தொழிலாளர்களிடம் இதுகுறித்து அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டதாகவும், எதிர்காலத்தில் தொழிற்சங்கத்துடன் கலந்தாலோசித்து இது போன்ற முடிவுகளை எடுப்பதாகவும் அந்த நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல்வேறு இடங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories