உலகம்

தொடர்ந்து 5-வது முறை: வங்கதேச தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அவாமி லீக்.. விவரம் என்ன ?

வங்கதேச தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து 5-வது முறை: வங்கதேச தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அவாமி லீக்.. விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்ற பங்களாதேஷ் நாட்டில் சுதந்திரத்தில் இருந்தே அவாமி லீக் கட்சி பெரிய கட்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த நாட்டின் பிரதமராக அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷைக் ஹசினா இருந்து வருகிறார்.

2009 -ம் ஆண்டு இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற அவர், அதன்பின்னர் தோல்வியே தழுவாமல் தொடர்ந்து 4 முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இதனிடையே நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவுக்கு வந்த நிலையில், அங்கு ஜனவரி 7-ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஷேக் ஹசீனா, எதிர்கட்சிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்தார். இதன் காரணமாக பங்காளதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.

தொடர்ந்து 5-வது முறை: வங்கதேச தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அவாமி லீக்.. விவரம் என்ன ?

அதனைத் தொடர்ந்து அங்கு நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் அவாமி லீக் கட்சி போட்டியிட்ட நிலையில், பெரும்பாலும் எதிர்வேட்பாளர்களாக சுயேட்சைகளே நின்றனர். இதனால் அவாமி லீக் கட்சி தொடர்ந்து 5-வது முறையாக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வங்கதேச சுதந்திரத்துக்காக போராடி முதல் முறையாக அங்கு பிரதமராக பொறுப்பேற்ற ஷேக் முகம்மது முஜிபுர் ரகுமாமானின் மகளே ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories