உலகம்

Press Meet-ன் போது கழுத்தில் கத்தியால் குத்திய நபர் : ஆபத்தான நிலையில் தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் !

Press Meet-ன் போது கழுத்தில் கத்தியால் குத்திய நபர் : ஆபத்தான நிலையில் தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தென்கொரியாவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் லீ ஜே மியுங். இவர் கடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் தற்போதைய அதிபர் யுன் சுக் இயோலிடம் தொலைவியைத் தழுவினார்.

அதனைத் தற்போது தற்போது தென் கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான இருக்கும் லீ ஜே மியுங் துறைமுக நகரமான பூசானுக்கு வருகை வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அங்கு நின்ற நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லீ ஜே மியுங் மீது பாய்ந்து அவரின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Press Meet-ன் போது கழுத்தில் கத்தியால் குத்திய நபர் : ஆபத்தான நிலையில் தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் !

இதனிடையே அங்கிருந்த காவலர்கள் கத்தியால் குத்திய மர்ம நபரை கைது செய்தனர். இதனிடையே இது குறித்து வீடியோ வெளியாகி அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லீ ஜே மியுங் குறித்த புகைப்படத்தை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

அதில், லீ ஜே மியாங் கண்களை மூடிக்கொண்டு தரையில் படுத்திருக்கும் நிலையில், அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களை அவரின் ரத்தம் வெளியாகும் இடத்தை அழுத்தி பிடித்திருக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories