உலகம்

16 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி : காசாவில் ஐ.நா கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானத்தை தடுத்த அமெரிக்கா !

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

16 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி : காசாவில் ஐ.நா கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானத்தை தடுத்த அமெரிக்கா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 16 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

16 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி : காசாவில் ஐ.நா கொண்டு வந்த போர் நிறுத்த தீர்மானத்தை தடுத்த அமெரிக்கா !

இந்த நிலையில், காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தனது வீட்டோ (VETO ) அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்துள்ளது.இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில். ஐக்கிய நாடுகள் அவையில் போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஐநா சபையின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் இந்த தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்தது. இதனால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது வீட்டோ (VETO ) அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

இது குறித்துப் பேசிய ஐநாவுக்கான அமெரிக்காவின் தூதர் ராபர்ட் ஆட், "ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கிறார்கள். இதனால் இந்த தீர்மானம் நிறைவேறினால் அவர்கள் மீதான அதிகாரம் ஹமாஸ் அமைப்பிடம் செல்லும். இது மற்றொரு போரினை உருவாகும். ஏனென்றால் ஹமாஸ் அமைப்பு தீர்வை விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories