உலகம்

கிறிஸ்துமஸ் Special : வெறும் 12 படங்களை பார்த்தால் ரூ.1.66 லட்சம் பரிசு.. ஆனால்... - நிறுவனம் அறிவிப்பு !

கிறிஸ்துமஸை முன்னிட்டு 12 திரைப்படங்களை பார்த்தால் ரூ.1.66 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று பிரபல அமெரிக்க நிறுவனம் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் Special : வெறும் 12 படங்களை பார்த்தால் ரூ.1.66 லட்சம் பரிசு.. ஆனால்... - நிறுவனம் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விஷயங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் அமெரிக்காவில் பல ஆஃபர்கள், போட்டிகள், பரிசுகள் என வழங்கப்படும். தற்போது கிறிஸ்துமஸ் வருவதற்கு இன்னும் 1 மாத காலமே இருக்கும் நிலையில், போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது பிரபல நிறுவனம் ஒன்று அதிரடி மெகா பரிசு போட்டியை அறிவித்துள்ளது. அதாவது BloomsyBox என்ற தனியார் நிறுவனம் ஒன்று தான் இந்த போட்டியை அறிவித்துள்ளது. 12 ஹால்மார்க் விடுமுறை திரைப்படங்களை பார்க்க வேண்டும். அவ்வாறு அனைத்தையும் பார்த்து அதனை தரவரிசை படுத்தி வெற்றிபெறுவோருக்கு 2000 டாலர் (இன்றைய இந்திய மதிப்பில் ரூ.1,66,460) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் Special : வெறும் 12 படங்களை பார்த்தால் ரூ.1.66 லட்சம் பரிசு.. ஆனால்... - நிறுவனம் அறிவிப்பு !

அதோடு அந்த திரைப்படங்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு :

The Most Wonderful Time of the Year (2008),

Crown for Christmas (2015),

The Nine Lives of Christmas (2014),

Christmas Getaway (2017),

Journey Back to Christmas (2016),

Ghosts of Christmas Always (2022),

Family for Christmas (2015),

Christmas Under Wraps (2014),

Three Wise Men and a Baby (2022),

A Royal Christmas (2014),

Northpole (2014)

The Christmas Train (2017).

- ஆகிய 12 திரைப்படங்கள் இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் Special : வெறும் 12 படங்களை பார்த்தால் ரூ.1.66 லட்சம் பரிசு.. ஆனால்... - நிறுவனம் அறிவிப்பு !

அதுமட்டிமின்றி, இந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்த பல்வேறு முறைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதாவது, முன்கணிப்பு அளவு, வேதியியல் சோதனை, கண்ணீரைத் தூண்டும் சோதனை, மறுபதிப்பு உள்ளிட்ட அளவுகோல்களின்படி போட்டியாளர்கள் திரைப்படங்களை தரவரிசைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு திரைப்படங்களை பார்ப்பதற்கு போட்டியாளர்களுக்கு என்று இரண்டு ஜோடி அல்ட்ரா-காஸியான செனில் சாக்ஸ், கிரார்டெல்லி ஹாட் கோகோ உள்ளிட்டவையும் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்த போட்டி அமெரிக்கர்களுக்கு மட்டுமே என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால் மற்ற நாட்டு திரை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories