உலகம்

"தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்" - பல்வேறு நாடுகளின் கோரிக்கையை ஏற்று இஸ்ரேல் அறிவிப்பு !

தினமும் 4 மணி நேரம் வடக்கு காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

"தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்" - பல்வேறு நாடுகளின் கோரிக்கையை ஏற்று இஸ்ரேல் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.

"தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்" - பல்வேறு நாடுகளின் கோரிக்கையை ஏற்று இஸ்ரேல் அறிவிப்பு !

காசா பகுதியில் உள்ள பள்ளிகள், தங்குமிடங்கள், மருத்துவமனைப் பகுதிகள் போன்றவற்றில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கபாதைகள் அமைந்திருப்பதாக கூறி அங்கு இஸ்ரேல் ராணுவம், வான்தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனிடையே அங்கு பொதுமக்கள் வெளியேற தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு பல்வேறு நாடுகள் இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தினமும் 4 மணி நேரம் வடக்கு காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், பல்வேறு நாடுகளில் கோரிக்கையை ஏற்று, தினமும் 4 மணி நேரம் வடக்கு காசாவில் இஸ்ரேல் சார்பில் எந்த தாக்குதலும் நடத்தாது. அந்த நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவார்கள் தெற்கு காசாவுக்கு செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி இது பற்று கூறுகையில், "அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories