உலகம்

ஆக்கிரமிப்பு பகுதிகளில் தேர்தல்.. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம்.. கண்டுகொள்ளாத புதின்!

தங்கள் நாட்டோடு இணைக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளில் பிராந்திய தேர்தலை ரஷ்யா நடத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பு பகுதிகளில் தேர்தல்.. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம்.. கண்டுகொள்ளாத புதின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனுக்கு சொந்தமாக இருந்த கிரிமியா, டான்பாஸ் போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இருந்த ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்கள் ரஷ்யாவின் ஆதரவோடு கிளர்ச்சி செய்து அதனை ரஷ்யாவோடு இணைந்தனர்.

ஆக்கிரமிப்பு பகுதிகளில் தேர்தல்.. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம்.. கண்டுகொள்ளாத புதின்!

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா பகுதியில் டான்பாஸ் லூஹான்ஸ்க், கொசான், ஸபோரிஷியா மற்றும் டொனட்ஸ் போன்ற பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. மேலும், கடந்த வருடம் இந்த பகுதிகளை ரஷ்யாவோடு இணைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், பெருவாரியான மக்கள் ரஷ்யாவோடு இணைய ஆதரவு தெரிவித்ததாகவும், இதனால் அந்த பகுதிகள் ரஷ்யாவோடு இணைக்கப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்தது.

இந்த நிலையில், தங்கள் நாட்டோடு இணைக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளில் பிராந்திய தேர்தலை ரஷ்யா நடத்தியுள்ளது. ஆனால், ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உக்ரைன் பிராந்தியங்களில் ரஷ்யா நடத்தும் தேர்தல் , சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது. அந்த சட்டங்களை ரஷ்யா தொடா்ந்து மீறி வருகிறது' என்று கூறியுள்ளார். மேலும், உக்ரைனும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளது.

banner

Related Stories

Related Stories