உலகம்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல நடிகை திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல நடிகை சிலவினா லுனா உயிரிழந்தார்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல நடிகை திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர் சில்வினா லூனா. இவர் பிரபல நடிகையும் மாடல் அழகியுமாவர். கடந்த 2011ம் ஆண்டு இவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்குச் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனை சென்று சோதனை செய்தபோது அவருக்கு சிறுநீகர மாற்று அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும் என தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல நடிகை திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பின்னர் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து 79 நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தி தெரிவித்தள்ளார். இதையடுத்து உயிரிழந்த சில்வினா லூனாவிற்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில்வினா லூனா பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்குத் தடை செய்யப்பட்ட மருத்துகள் பயன்படுத்தப்பட்டதாலேயே அவருக்குச் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories