உலகம்

“பெண்களுடன் பேசவே கூச்சமாக இருக்குது..” - உயரத்தை கூட்ட ரூ.1.5 கோடியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வாலிபர்!

41 வயது வாலிபர் ஒருவர் உயரத்தை கூட்ட ரூ.1.5 கோடி செலவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பெண்களுடன் பேசவே கூச்சமாக இருக்குது..” - உயரத்தை கூட்ட ரூ.1.5 கோடியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வாலிபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவின் மினசோட்டாவில் அமைந்துள்ளது மினியாபோலிஸ். இங்கு மோசஸ் கிப்சான் (Moses Gibson) என்ற 41 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. காரணம் இவரை யாரும் காதலிக்கவில்லை என்கிறார் மோசஸ்.

ஏனெனில் இவர் உயரம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கிறார். ஆனால் இவரது உயரம் 5 அடி 5 அங்குலமாக இருந்தது. இதனால் இவர் தான் உயரம் குறைவாக இருப்பதாக கூறி யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். மேலும் குறிப்பாக பெண்களுடன் இவர் பேசாமலே இருந்து வந்துள்ளார்.

“பெண்களுடன் பேசவே கூச்சமாக இருக்குது..” - உயரத்தை கூட்ட ரூ.1.5 கோடியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வாலிபர்!

இதுகுறித்து மோசஸ் கூறுகையில், "நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது கூட, என் உயரத்தில் நான் எப்போதும் மகிழ்ச்சியடையவில்லை. அது படிப்படியாக என்னை பாதிக்க ஆரம்பித்தது. நான் என்னைப் பற்றி நன்றாக உணரவில்லை, பெரும்பாலான நேரங்களில் அதைப் பற்றி மகிழ்ச்சியடையவில்லை. நான் என்னை உயரமாக காட்டிக்கொள்ள பல விசயங்களை செய்தேன். ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

“பெண்களுடன் பேசவே கூச்சமாக இருக்குது..” - உயரத்தை கூட்ட ரூ.1.5 கோடியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வாலிபர்!

அதோடு இதனாலே இவர் பெண்களுடனும் பேசாமல் இருந்துள்ளார், இதனாலே இவருக்கு காதலியும் இல்லை. எனவே தன்னை உயரமாக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள எண்ணியுள்ளார். ஆனால் அதற்கு பணம் தேவை என்பதால் இரவு - பகல் என்று கடுமையாக உழைத்தார். பகலில் Software Engineer ஆக இருக்கும் இவர், அதில் சம்பாதிக்கும் பணம் போதாது என்பதால் இரவு Uber ஓட்டி வந்துள்ளார். அதன்மூலம் கிடைக்கும் பணத்தை சேமித்து கடந்த 2016-ல் தனது காலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு 3 அடி உயர்ந்துள்ளார்.

“பெண்களுடன் பேசவே கூச்சமாக இருக்குது..” - உயரத்தை கூட்ட ரூ.1.5 கோடியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வாலிபர்!

ஆரம்பத்தில் பெரிதாக அது தெரியவில்லை என்றாலும், நாளாக நாளாக அந்த உயரமும் இவருக்கு பத்தவில்லை. எனவே மேலும் உயரமாக எண்ணிய இவர், அடுத்ததாக ஒரு அறுவை சிகிச்சைக்கு தயாரானார். எனவே அதற்கும் சேர்த்து பணம் சம்பாதிக்க தொடங்கியுள்ளார். இப்படியே முழு நேர உழைப்பையும் போட்டு, சம்பாதித்த பணத்தை தனது உயரத்துக்காக செலவழித்துள்ளார் மோசஸ்.

“பெண்களுடன் பேசவே கூச்சமாக இருக்குது..” - உயரத்தை கூட்ட ரூ.1.5 கோடியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வாலிபர்!

அதன்படி கடந்த மாதம் ஒரு அறுவை சிகிச்சை மோசஸ் மேற்கொண்டார். அதில் அவரது டிபியா மற்றும் ஃபிபுளா எலும்புகளை உடைத்து அவரை உயரமாக காட்டுவதற்காக மேக்னெட்டிக் ஆணிகளை மருத்துவர்கள் பயன்படுத்தியுள்ளனர். தற்போது மோசஸ் 5 அடி 10 அங்குலம் வரை உயரமாக காணப்படுகிறார். இந்த 2 அறுவை சிகிச்சைகளுக்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.5 கோடி அவர் செலவு செய்துள்ளார்.

இதற்கு காரணம் அவரது தாழ்வு மனப்பான்மை என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தான் உயரமாக வேண்டும் என்று மோசஸ், மருந்து சாப்பிட்டு, மத போதகரை சந்தித்து, பிரத்யேகமாக பிரேயர் செய்து என பல வேலைகளை செய்து வந்துள்ளார். இருப்பினும் மோசஸ் இவ்வாறு செய்துள்ளது பலரது விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories