உலகம்

தூங்க மறுத்த பச்சிளம் குழந்தை.. எரிச்சலடைந்து பணிப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்து போன பெற்றோர் !

கைக்குழந்தை தூங்க மறுத்ததால் எரிச்சலடைந்த பணிப்பெண் அந்த குழந்தையின் கையில் கடித்துள்ள சம்பவம் பெற்றோரை அதிர வைத்துள்ளது.

தூங்க மறுத்த பச்சிளம் குழந்தை.. எரிச்சலடைந்து பணிப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்து போன பெற்றோர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்த காலத்தில் எல்லாம் குழந்தைகளை பராமரிக்க பெற்றோர்கள் தனியாக பணிப்பெண்ணை அமர்த்தி வருகின்றனர். இந்த கலாச்சாரம் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த நிலையில், தற்போது பல நாடுகளில் இது நடைபெற்று வருகிறது.

ஏனெனில் பெற்றோர்கள் இரண்டு பெரும் வேலைக்கு செல்லும் நேரத்தில் அந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ள தனியாக ஒரு ஆள் வேண்டும். எனவே அவர்கள் இதற்காக ஒரு பெண்ணை வேளைக்கு எடுக்கிறார்கள் அவர்களை பேபி சிட்டர் என்று அழைப்பர். அதே போல் தான் தம்பதி ஒருவர் பணிக்கு ஒரு பெண்ணை அழைத்து வந்தபோது அந்த பெண் செய்த காரியத்தை கண்டு அதிர்ந்து போனர்.

தூங்க மறுத்த பச்சிளம் குழந்தை.. எரிச்சலடைந்து பணிப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்து போன பெற்றோர் !

சிங்கப்பூரில் வசிக்கும் தம்பதி ஒருவருக்கு 2 குழந்தைகள். ஆனால் பெற்றோர்கள் 2 பேரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இதற்காக பெண் ஒருவரை 2021 ஆம் ஆண்டு பணியமர்த்தினர். அந்த பெண் இந்தோனேசியாவை சேர்ந்த மசிதா என்ற 33 வயது பெண் ஆவார்.

ஆர்மபித்தால் இரண்டு குழந்தைகைளையும் நன்றாக கவனித்து வந்த மசிதா, நாளுக்கு நாள் எரிச்சலைடைந்துள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு மே மாதம், பெற்றோர் இல்லாத நேரத்தில் இவர் குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். அப்போது அந்த கை குழந்தையை தூங்க வைக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த குழந்தையோ அழுது கொண்டே இருந்துள்ளது.

தூங்க மறுத்த பச்சிளம் குழந்தை.. எரிச்சலடைந்து பணிப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்து போன பெற்றோர் !

இதனால் எரிச்சலைடந்த பணிப்பெண், அந்த குழந்தையின் கையை கடித்துள்ளார். மேலும் அதனை அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம நடந்து சில மணி நேரங்களில் குழந்தையின் தாய் வீட்டுக்கு வரவே பிள்ளை கையில் ஏற்பட்டிருக்கும் காயத்தை கண்டு அதிர்ந்தார். மேலும் இதுகுறித்து விசாரித்தார். ஆரம்பத்தில் மழுப்பி வந்த மசிதா, பின்னர் உண்மையை ஒப்புட்டுக்கொண்டு கதறி அழுதார்.

தூங்க மறுத்த பச்சிளம் குழந்தை.. எரிச்சலடைந்து பணிப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்து போன பெற்றோர் !

எனினும் குழந்தையை இப்படி செய்ததால், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் பெற்றோர். தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கை குழந்தை என்றும் பாராமல் தெரிந்தே அந்த குழந்தையை கடித்தும் அடித்தும் கொடுமை படுத்திய பணிப்பெண் மசிதாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories