உலகம்

உலகை உலுக்கிய கொலை.. இறந்ததாக நாடகமாடிய மாடல் அழகி: 6 மாதத்திற்குப் பிறகு வெளிவந்த பகீர் உண்மை?

ஜெர்மனியில் தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்து இறந்ததாக மாடல் அழகி நாடகமாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகை உலுக்கிய கொலை..    இறந்ததாக நாடகமாடிய மாடல் அழகி: 6 மாதத்திற்குப் பிறகு வெளிவந்த பகீர் உண்மை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஷஹ்ரபான் கே. மாடல் அழகியான இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலங்களுக்கு அழக குறிப்புகளை வழங்கி வந்துள்ளார். மேலும் இவர் ஷேகிர் கே என்ற வாலிபரைக் காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காதலனைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பிறகு அவர் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் உறவினர்களுக்குக் கிடைக்கவில்லை.

இதனால் அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் பல இடங்களில் தேடிய பிறகு இங்கோல்ஸ்டாட் நகரில் அவரது காரை கண்டுபிடித்தனர். அதில் முகம் சிதைந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது.

உலகை உலுக்கிய கொலை..    இறந்ததாக நாடகமாடிய மாடல் அழகி: 6 மாதத்திற்குப் பிறகு வெளிவந்த பகீர் உண்மை?
picture alliance

பிறகு அந்த சடலம் ஷஹ்ரபான் கே தான் என்பதை அவரது பெற்றோர்கள் உறுதி செய்தனர். ஆனால் அவரது உடற்கூறு ஆய்வு அறிக்கை மூலம் இறந்தது ஷஹ்ரபான் கே அல்ல எனவும் அது கதீட்ஜா ஓ என்ற பெண் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை யார் கொலை செய்தது? அவரது உடல் எப்படி ஷஹ்ரபானின் காருக்குள் வந்தது? மாயமான ஷஹ்ரபானி எங்கே என்ற கேள்விகள் போலிஸார் முன்பு இருந்தது. இதற்காக விடையைத் தேடியும் போலிஸாருக்கு எந்த தடையமும் கிடைக்கவில்லை.

இருப்பினும் போலிஸார் இந்த வழக்கைத் தொடர்ந்து 6 மாதம் விசாரித்து வந்துள்ளனர். அப்போதுதான் மாயமான ஷஹ்ரபானி போலியாக இன்ஸ்டாகிராமில் பல கணக்குகளை பயன்படுத்தி வந்தது தெரிந்தது. அதில் தான் கதீட்ஜாவுடன் பழகி வந்ததும் தெரியவந்தது.

உலகை உலுக்கிய கொலை..    இறந்ததாக நாடகமாடிய மாடல் அழகி: 6 மாதத்திற்குப் பிறகு வெளிவந்த பகீர் உண்மை?

மேலும் குடும்ப பிரச்சனை காரணமாகத் தன்னை போன்ற உருவ ஒற்றுமை கொண்டவரை தேடிப் பிடித்து கொலை செய்து தாம் இருந்ததாக நாடகமாட நினைத்துள்ளார். இந்த திட்டத்தின்படி தான் கதீட்ஜாவுடன் பழகி அவரை நேரில் சந்தித்து காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

பிறகு யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது முகத்தைச் சிதைத்துத் தான் இறந்துவிட்டதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories