உலகம்

கண்ணாமூச்சி விளையாட்டால் நடந்த விபரீதம்.. வங்கதேச சிறுவன் மலேசியாவில் கண்டுபிடிப்பு : நடந்தது என்ன?

கண்ணாமூச்சி விளையாடும் போது கண்டெயினருக்குள் ஒளிந்து கொண்ட சிறுவன் வங்கதேசத்தில் இருந்து மலேசியாவிற்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

கண்ணாமூச்சி விளையாட்டால் நடந்த விபரீதம்.. வங்கதேச சிறுவன் மலேசியாவில் கண்டுபிடிப்பு : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் சிறுவயதில் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடி இருப்போம். அப்போது நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஆபத்தான இடமாக இருந்தாலும் கூட அங்கு ஒளிந்து கொள்வோம். சில நேரங்களில் இது விபரீதமாகவும் நடந்து விடும். ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்ட பிறகு அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்த அனுபவமும் நம்மில் சிலருக்கு இருக்கும்.

அதனால்தான் பெற்றோர்கள் கண்ணாமூச்சி விளையாடும் போது அங்கு ஒளியக்கூடாது, இங்கு போகக்கூடாது என எச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கண்ணாமூச்சி விளையாட்டால் தவறுதலாக மலேசியாவிற்குச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. அது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

கண்ணாமூச்சி விளையாட்டால் நடந்த விபரீதம்.. வங்கதேச சிறுவன் மலேசியாவில் கண்டுபிடிப்பு : நடந்தது என்ன?

வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஃபஹிம். இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி சிட்டகாங் நகரில் உள்ள துறைமுக பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடியுள்ளார். அப்போது சிறுவன் ஃபஹிம், கண்டெய்னர் ஒன்றுக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் அதே கண்டெய்னரில் சிறுவன் தூங்கியுள்ளார். பிறகு கண்விழித்துப் பார்த்தபோது கண்டெய்னரின் கதவுகள் மூடப்பட்டு இருந்துள்ளது. பலமுறை கதவைத் திறந்து பார்க்க முயன்று சிறுவனால் முடியவில்லை.

கண்ணாமூச்சி விளையாட்டால் நடந்த விபரீதம்.. வங்கதேச சிறுவன் மலேசியாவில் கண்டுபிடிப்பு : நடந்தது என்ன?

இப்படியே உணவு, தண்ணீர் இல்லாமல் சிறுவன் கண்டெய்னருக்குள் 6 நாட்கள் இருந்துள்ளார். பின்னர் கப்பலில் ஏற்றப்பட்ட இந்த கண்டெய்னர் மலேசியா துறைமுகத்திற்கு வந்துள்ளது. அப்போது கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் சிறுவன் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் சிறுவனிடம் விசாரித்தபோதுதான், நடந்தது பற்றி அங்கிருந்தவர்களுக்கு தெரியவந்தது. பிறகு சிறுவனுக்கு சாப்பிட உணவு கொடுத்துள்ளனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் சோர்வுடன் இருந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவன் ஃபஹிம் சிகிச்சை பெற்று வருகிறான். தற்போது சிறுவன் கண்டெய்னரில் இருந்து மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories