உலகம்

மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை..போர்வையைக் கொண்டு கேட்ச் பிடித்த மக்கள்: வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

சீனாவில் மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை பொதுமக்கள் கூடி நின்று போர்வை விரித்துக் காப்பாற்றிய நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை..போர்வையைக் கொண்டு கேட்ச் பிடித்த மக்கள்: வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் போர், கலவரம், கொலைகள், இயற்கை பேரிடர்கள் போன்ற கொடுமையான நிகழ்வுகள் நடந்தாலும் அவ்வப்போது நடக்கும் சில நிகழ்வுகள் இன்னும் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்நிலையில் சீனாவில் அடுக்கு மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தையைப் பொதுமக்கள் ஒன்று சேர்த்துக் காப்பாற்றும் வீடியோ வைரலாகி பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அந்த வீடியோவில், "அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஜன்னலுக்கு மேல உள்ள மேற்கூரையில் குழந்தை ஒன்று தொங்கிக் கொண்டு கீழே விழுகிறது. அப்போது கீழே போர்வையை விரித்து நின்று கொண்டிருந்த பொதுமக்கள் குழந்தையைக் காப்பாற்றும் காட்சிப் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் சீனாவில் சிச்சுவான் என்ற பகுதியில் நடந்துள்ளது என தெரியவந்துள்ளது. 2 வயதாகும் அந்த குழந்தை ஜன்னல் வழியாக விழுந்த விளையாட்டுப் பொருளை எடுப்பதற்காகத் தவறுதலாக வந்துள்ளது.

மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை..போர்வையைக் கொண்டு கேட்ச் பிடித்த மக்கள்: வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து போர்வையை விரித்து குழந்தை விழுந்தால் பிடித்துக் கொள்ளக் காத்திருந்தனர். தம்மைக் காப்பாற்றக் கீழே ஆட்கள் இருப்பதைத் தெரிந்து கொண்ட குழந்தை நம்பிக்கையுடன் குதித்துள்ளது. குழந்தையின் நம்பிக்கைக்கு ஏற்ப குதித்தவுடன் குழந்தையைப் பிடித்துக் காப்பாற்றி மறுவாழ்க்கை கொடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories