உலகம்

கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா.. தீவிர சிகிச்சையில் மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை ரம்பா கார் விபத்தில் சிக்கியதாகவும், தனது மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா.. தீவிர சிகிச்சையில் மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்சினிமாவில் 90களில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் 1996ம் ஆண்டு வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் தனக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர்.

நடிகர் ரஜினி, அஜித், விஜய், கார்த்தி என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். இவர் தமிழில் கடைசியாகப் பெண் சிங்கம் படத்தில் நடித்துள்ளார். 1990ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளுக்குத் தெலுங்கு, கண்டம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா.. தீவிர சிகிச்சையில் மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!

இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கணவனுடன் கனடாவிலேயே செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.

மேலும் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருவார். இந்நிலையில் நடிகை ரம்பா கனடாவில் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், பள்ளியிலிருந்து தனது மகள் சாஷாவை அழைத்து வரும் போது விபத்து நடந்தது என்றும், அவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாகப் பிரார்த்தனை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதைப்பார்த்த சக நடிகர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் நடிகை ரம்பா மற்றும் குழந்தை சாஷாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories