உலகம்

பிறந்த நாள் விருந்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட் வழங்கிய ஹோட்டல்.. குடித்த 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்

பாகிஸ்தானில், பிறந்தநாள் விருந்தில் இரண்டு சிறுவர்களுக்கு ஆசிட் கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த நாள் விருந்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்  வழங்கிய ஹோட்டல்.. குடித்த 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தானில் உள்ள பிரபலமான ஹோட்டலில் கடந்த 27ம் தேதி பிறந்தநாள் விருந்து ஒன்று நடைபெற்றது. இதில் இரண்டு சிறுவர்களுக்கு வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதை வாங்கிய அகமது என்ற சிறுவன் தனது கையை கழுவியுள்ளார். அப்போது கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டதைப்போன்று புண்ணாக மாறியுள்ளது. இதனால் எரிச்சல் தாங்காமல் சிறுவன் கதறியுள்ளான்.

பிறந்த நாள் விருந்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்  வழங்கிய ஹோட்டல்.. குடித்த 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்

அதேபோல் வஜிஹா என்ற சிறுமி ஆசிட் கலந்த தண்ணீரை கடித்த சில மணி நேரத்திலேயே வாந்தி எடுத்துள்ளார். இந்த இரண்டு சம்பவத்தையும் கண்ட சிறுவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இருவரையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள் விருந்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்  வழங்கிய ஹோட்டல்.. குடித்த 2 சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்

இந்த புகாரை அடுத்து போலிஸார் உணவகத்தின் மேலாளரை கைது செய்துள்ளனர். மேலும் ஆசிட் கலந்த தண்ணீர் பாட்டில் பிறந்த நாள் விருந்தில் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories