உலகம்

"தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்" - ஒரு எண் மாறியதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !

முதல் மாத சம்பளத்தை மாற்றி அனுப்பிய நபரிடம் பணத்தை திரும்ப கேட்டபோது தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்" - ஒரு எண் மாறியதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மலேசியாவைச் சேர்ந்தவர் ஃபஹதா பிஸ்தாரி. இவர் முதல் முறையாக வேலையில் சேர்ந்து தான் வாங்கிய முதல்மாத சம்பளத்தை தனது அம்மாவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். தனது சம்பள பணத்தை பார்த்து அம்மா மகிழ்வார்கள் என்று நினைத்திருந்த அவருக்கு அதன் பின்னரே அதிர்ச்சி காத்திருந்தது.

தவறுதலாக அந்த பெண் ஒரு நம்பரை மாற்றி பதிவிட்டதால் அந்தப் பணம் வேறு யாரோ ஒருவருக்கு சென்றுவிட்டது. பின்னர் அவரை தொடர்பு கொண்டு தனது பணம் குறித்து கேட்டபோது பணத்தை திரும்பதர முடியாது என்று கூறியுள்ளார்.

"தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்" - ஒரு எண் மாறியதால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !

அது தனது முதல் மாத சம்பளம் என்றும் அதனால் அது தனக்கு நிச்சயம் வேண்டும் என்றும் அந்த பெண் கூறிய நிலையில், பணத்தை யாருக்கோ தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் என அந்த நபர் கூறியுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி அந்த பெண் இதுகுறித்து டிக்டாக்கில் பதிவிட்டு தனது நிலை குறித்து கூறியுள்ளார். இதன் காரணமாக இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பலர் அவருக்கு ஆறுதல் கூறிய நிலையில், சிலர் இது குறித்து போலிஸில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories