உலகம்

காசுக்காக இப்படியா செய்வது ? தைவான் விவகாரத்தில் விமர்சன வலையில் சிக்கிய அமெரிக்கா ! நடந்தது என்ன ?

தைவானுக்கு ரூ.8.800 கோடி மதிப்புள்ள அதி நவீன போர் தளவாடங்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

காசுக்காக இப்படியா செய்வது ? தைவான் விவகாரத்தில் விமர்சன வலையில் சிக்கிய அமெரிக்கா ! நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இரண்டாம் உலகப் போரின்போது , சீனாவை ஆண்டு வந்த கோமிங்டாங் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் கோமிங்டாங் கட்சியை அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரித்த நிலையில், மக்கள் ஆதரவு காரணமாக அந்த போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது.

கம்யூனிஸ்டுகளின் இந்த வெற்றியைத் தொடர்ந்து கோமிங்டாங் கட்சியின் தலைவர் சியாங் காய்-ஷேக் தலைமையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சீனாவுக்கு அருகில் இருந்த தைவானுக்கு தப்பிச்சென்றனர். தொடர்ந்து நாங்கள்தான் உண்மையான சீனா என கோமிங்டாங் கட்சியினர் கூறிக்கொள்ள, சீனாவின் 90% நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களே உண்மையான சீனா என்று கூறியது.

காசுக்காக இப்படியா செய்வது ? தைவான் விவகாரத்தில் விமர்சன வலையில் சிக்கிய அமெரிக்கா ! நடந்தது என்ன ?

ஆரம்பத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் தைவானை உண்மையான சீனா என அங்கீகரித்த நிலையில், காலால் செல்ல செல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீனாவை அங்கீகரிக்க தொடங்கின. தற்போதைய நிலையில், தைவானை உலகின் 14 நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா கூட இன்னும் தைவானை அங்கீகரிக்கவில்லை.

இந்தகைய நிலையில், சமீபத்தில் மிக மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றார். அவர் வருகைக்கு சீனா கண்டும் கண்டனம் தெரிவித்தது. ஆனாலும் அதை மீறி அவர் தைவான் சென்றார். அவர் சென்ற போயிங் விமானத்தில் அவரோடு 5 பிரதிநிதிகள் சென்றனர்.

சீனாவுக்கும் தைவானுக்கும் சமீப காலமாக நல்லுறவு அதிகரித்த நிலையில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையால் இரு நாடுகளுக்கு இடையிலும் மோதல் அதிகரித்தது. இந்த சம்பவத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், தனது படைகளை தைவான் நோக்கி சீனா நிறுத்தியது.

காசுக்காக இப்படியா செய்வது ? தைவான் விவகாரத்தில் விமர்சன வலையில் சிக்கிய அமெரிக்கா ! நடந்தது என்ன ?

இந்த நிலையில் தற்போது தைவானுக்கு ரூ.8.800 கோடி மதிப்புள்ள அதி நவீன போர் தளவாடங்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அதிநவீன போர் விமானங்கள், போர் கப்பல்களை அழிக்கக் கூடிய ஹார்பன் பிளாக் வகை ஏவுகணைகள், எதிரி ஏவுகணைகளை நடுவானில் மறித்து அழிக்கும் ஏவுகணைகள், ரேடார் கண்காணிப்பு அமைப்புகள் போன்றவை அளிக்கப்பட உள்ளன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா விமர்சித்துள்ளது. அதேநேரம் அமெரிக்க விமர்சகர்கள் தென் சீன கடல் பகுதியில் தைவானுக்கும் சீனாவுக்கு இடையில் பகையை ஏற்படுத்தி அதன்மூலம் தனது ஆயதங்களை விற்கவே அமெரிக்கா இந்த பயணத்தை மேற்கொண்டது என விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories