உலகம்

“IT நிறுவனங்களை நிரப்பிய இந்தியர்கள் - அமெரிக்காவிலும் பரவிய சாதிய கொடுமைகள்” : ஆதாரத்தோடு பேசும் பதிவு !

‘இந்தியர்களை வேலைக்கு எடுக்காவிட்டால் இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் உருவாகி விடும்’ என பில் கேட்ஸ் சொல்லவே இல்லை என்பதுதான்.

“IT நிறுவனங்களை நிரப்பிய இந்தியர்கள் - அமெரிக்காவிலும் பரவிய சாதிய கொடுமைகள்” : ஆதாரத்தோடு பேசும் பதிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஒரு காலம் இருந்தது. ஐடி துறை அறிமுகமாகி இந்தியாவில் நாராயணமூர்த்தி போன்றோர் பெரும் பணக்காரர்களாக ஆன காலம். பலருக்கு ஐடி துறையில் வேலை கிடைத்தது. தடாலென அந்தத் தலைமுறையினர் லட்சங்களில் சம்பளம் பெறத் தொடங்கினர்.

சென்னையில் டைடல் பார்க் பிறந்தது. பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தோன்றின. கார்களிலேயே ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் பாணிகளை பார்த்து பலரும் அதிசயித்தோம். ஆட்டம், பாட்டம், அவுட்டிங், வெளிநாடு என ஐடி ஊழியர்களின் வாழ்க்கைகளை வண்ணங்கள் நிரப்பின.

“IT நிறுவனங்களை நிரப்பிய இந்தியர்கள் - அமெரிக்காவிலும் பரவிய சாதிய கொடுமைகள்” : ஆதாரத்தோடு பேசும் பதிவு !

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்கும் சென்று பணிபுரியும் வாய்ப்புகள் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வாய்த்தன. ஆன் சைட், ஆஃப்சைட் என வெளிநாட்டுக்கும் இந்தியாவுக்குமென பறந்து பறந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘இந்திய ஊழியர்கள் பணிக்கமர்த்தப்படுவது நிறுத்தப்பட்டால், இந்தியாவில் ஒரு மைக்ரோசாஃப்ட் உருவாகும்’ என பில் கேட்ஸ் சொன்னார் என நம்பப்படுமளவுக்கு ஐடி நிறுவனங்களை இந்தியர்கள் நிரப்பியிருந்தனர்.

பில் கேட்ஸ் அப்படிச் சொன்னதாகவே எடுத்துக் கொள்வோம். இந்திய ஊழியர்கள் பணிக்கமர்த்தப்படுவது நிறுத்தப்படவில்லை. எனவே இந்தியாவில் இன்னொரு மைக்ரோசாஃப்ட் உருவாகவில்லை. எனில் அமெரிக்காவில் இந்தியா என்ன உருவாக்கியிருக்கின்றனர்?

“IT நிறுவனங்களை நிரப்பிய இந்தியர்கள் - அமெரிக்காவிலும் பரவிய சாதிய கொடுமைகள்” : ஆதாரத்தோடு பேசும் பதிவு !

சாதி!

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் கலிஃபோர்னியாவில் சிஸ்கோ சிஸ்டம்ஸ் மீது கடந்த 2020ம் ஆண்டின் ஜூலை மாதம் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் இரண்டு மேலாளர்கள் சக ஊழியர் ஒருவரை சாதிய ரீதியாக ஒடுக்கியதாகக் குற்றச்சாட்டு.

என்னது சாதிய ரீதியாகவா? அமெரிக்காவிலா? அதுவும் மெத்தப் படித்தவர்களா?

மேலாளர்களால் பாதிக்கப்பட்டவர் ஒரு தலித். அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரிடம் பாகுபாடு காட்டியவர்கள் சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா ஆகிய இருவர். தலித் ஊழியர் பெறும் பதவி உயர்வை சாதிய பாரபட்சம் காட்டி இருவரும் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு இருந்தது.

2018ம் ஆண்டில் எடுக்கப்பட்ட அமெரிக்கக் கணக்கெடுப்பில் 67% தலித்கள் அமெரிக்க நிறுவனங்களில் பார்பட்சமாக நடத்தப்படுவதாக தெரிவித்திருக்கின்றனர்.

“IT நிறுவனங்களை நிரப்பிய இந்தியர்கள் - அமெரிக்காவிலும் பரவிய சாதிய கொடுமைகள்” : ஆதாரத்தோடு பேசும் பதிவு !

சிஸ்கோ சிஸ்டம்ஸில் மட்டும் இந்தியச் சாதி தலைதூக்கவில்லை. அச்சம்பவம் ஒரு பானைச் சோற்றுக்கான பதம் மட்டும்தான். அமெரிக்காவுக்கு சென்ற உயர்சாதியினர் சாதியையும் கொண்டு சென்று அச்சமூகத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அதே 2020ம் ஆண்டில் வாஷிங்க்டன் போஸ்ட் ஒரு கடிதத்தைப் பதிப்பிருந்தது. 30 தலித் பெண்கள் எழுதியிருந்த கடிதம் அது. சாதியைக் கண்டுபிடிக்கும் முனைப்பு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். ‘எந்த ஊர், எந்த மதம், மணம் முடித்தவர் யார்’ போன்ற சாதிய அடையாளத்தை தெரிந்து கொள்ளும் கேள்விகள் கேட்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவுக்கு இருக்கும் பல பஞ்சாயத்துகளில் புதுப் பஞ்சாயத்தாக சாதியும் சேர்ந்தது. இருந்தும் உயர்சாதியினர் ஓயவில்லை. இரண்டு வருடங்கள் கழிந்தன. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தியரான சுந்தர் பிச்சை தலைமை நிர்வாக இயக்குநராக பணிபுரியும் கூகுள் நிறுவனத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

“IT நிறுவனங்களை நிரப்பிய இந்தியர்கள் - அமெரிக்காவிலும் பரவிய சாதிய கொடுமைகள்” : ஆதாரத்தோடு பேசும் பதிவு !

அமெரிக்காவைச் சேர்ந்த செயற்பாட்டாளரான தேன்மொழி சவுந்தரராஜன் ஓர் உரையை கூகுள் நிறுவனத்தில் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வளவுதான். தேன்மொழி பேசினால் ‘தங்களின் வாழ்க்கைகள் ஆபத்துக்குள்ளாகிவிடும்’ என கூகுளின் உயர்சாதி ஊழியர்கள் அனைவரும் நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் செய்தனர். என்ன ஆபத்து நேர்ந்துவிடும்?

வேறொன்றுமில்லை. தேன்மொழி ஒரு தலித். அவர் சாதியைப் பற்றி பேசவிருந்தார். அப்படி பேசினால் சாதிக்கு காரணமாக இருப்பது உயர்சாதியினர்தான் என்கிற உண்மை நிறுவனத்தில் தெரிந்துவிடும். உயர்சாதியினரை பிற ஊழியர்கள் மதிக்க மாட்டார்கள். அவ்வளவுதான்.

‘தேன்மொழி இந்து மதத்துக்கு விரோதி’, ‘தேன்மொழிக்கு இந்துக்களை பிடிக்காது’ என்றெல்லாம் நம்மூர் வலதுசாரிகள் போலவே கூகுள் நிறுவன ஊழியர்கள் மின்னஞ்சல் அனுப்பி கடமையாற்றினர். தேன்மொழி பேசவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தனுஜா குப்தா பதவி விலகினார்.

“IT நிறுவனங்களை நிரப்பிய இந்தியர்கள் - அமெரிக்காவிலும் பரவிய சாதிய கொடுமைகள்” : ஆதாரத்தோடு பேசும் பதிவு !

அமெரிக்கச் சட்டத்தில் பாரபட்சம், பாகுபாடு, ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் இருக்கின்றன. எனினும் அவை இனம், நிறம், மதம், பாலினம், வயது முதலியவற்றைச் சார்ந்துதான் இருக்கிறது. அமெரிக்கச் சட்டத்தை சார்ந்து நிறுவனங்கள் இயங்குவதால் அவை கொண்டிருந்த விதிகளும் இனம், நிறம், மதம், பாலினம், வயது ஆகியவற்றை மட்டுமே கொண்டிருந்தன.

அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்ற உயர்சாதியினரின் தயவில் தற்போது அது மாறியிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தில் பாரபட்சம் காட்டக் கூடாத அடிப்படைகளில் ஒன்றாக சாதி சேர்க்கப்பட்டிருக்கிறது.

ட்விஸ்ட் என்னவென்றால், ‘இந்தியர்களை வேலைக்கு எடுக்காவிட்டால் இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் உருவாகி விடும்’ என பில் கேட்ஸ் சொல்லவே இல்லை என்பதுதான். அவர் அப்படிச் சொன்னதாக நமக்கு நாமே கதை விட்டு பீற்றிக் கொண்டு காலரை தூக்கி விட்டுக் கொண்ட விஷயம்தான் அது.

இந்தியர்களை வேலைக்கு எடுக்காமலிருந்தால் இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் உருவாகுமா தெரியவில்லை. ஆனால், போகிற போக்குக்கு அமெரிக்காவிலும் சாதிய வன்கொடுமைச் சட்டம் வரலாம்.

banner

Related Stories

Related Stories