உலகம்

Covid App பயன்படுத்திய 4.8 கோடி பயனாளர்களின் தகவல்களை 3 லட்சத்துக்கு விற்பனைக்கு விட்ட Hacker !

கோவிட் ஹெல்த் கோட் மொபைல் செயலி மூலம் 48.5 மில்லியன் பயனர்களின் தகவல்களை ஹேக்கர் ஹேக் செய்து விட்டதாகவும், அதனை 4000 டாலருக்கு விற்கப்போவதாகவும் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Covid App பயன்படுத்திய 4.8 கோடி பயனாளர்களின் தகவல்களை 3 லட்சத்துக்கு விற்பனைக்கு விட்ட Hacker !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சீனா நாட்டின் ஷாங்காய் நகரில் பயன்படுத்தப்படும் 'கோவிட் ஹெல்த் கோட் மொபைல் செயலி' (Covid Health Code Mobile App), கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியானது கோவிட் காலத்தில் மிகவும் உபயோகமாக இருந்ததால் அங்குள்ள மக்கள் இதனை பயன்படுத்தினர்.

Covid App பயன்படுத்திய 4.8 கோடி பயனாளர்களின் தகவல்களை 3 லட்சத்துக்கு விற்பனைக்கு விட்ட Hacker !

இந்த நிலையில் அந்த செயலியை பயன்படுத்திய சுமார் 48.5 மில்லியன் பயனர்களின் தகவல்களை ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்து விட்டதாகவும், அதனை விற்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதாவது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 'XJP' என்ற பெயரைக் கொண்ட அந்த ஹேக்கர், 'ஹேக்கர் ஃபோரம் ப்ரீச் ஃபோரம்ஸ்’(hacker forum Breach Forums) என்ற தளத்தில் தன்னிடமுள்ள தகவல்களை விற்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் அதனை 400 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3,18,520) விற்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Covid App பயன்படுத்திய 4.8 கோடி பயனாளர்களின் தகவல்களை 3 லட்சத்துக்கு விற்பனைக்கு விட்ட Hacker !

அவர் வெளியிடும் தகவல்களில் தொலைப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் சீன அடையாள எண்கள் மற்றும் உடல்நலம் தொடர்பான தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்த தகவல்கள் அனைத்தும் ஷாங்காய் நகரில் வசிப்பவர்களுடையதாகும்.

அதோடு அதற்கு மாதிரியாக (sample) முதலில் 47 பேரின் தகவல்களை அந்த தளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் இரண்டு பேர் தங்களது அடையாள எண்கள் தவறாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Covid App பயன்படுத்திய 4.8 கோடி பயனாளர்களின் தகவல்களை 3 லட்சத்துக்கு விற்பனைக்கு விட்ட Hacker !

மொபைல் செயலி மூலம் மில்லியன் கணக்கிலுள்ள மக்களின் தகவல்களை 4000 டாலருக்கு விற்கப்போவதாக அறிவித்துள்ள ஹேக்கர் அறிவித்துள்ளது அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories