உலகம்

15 அமெரிக்க விமானங்கள்,, 7 தைவான் விமானங்கள்.. அமெரிக்க சபாநாயகர் பாதுகாப்புக்கு அணிவகுத்த விமானப்படை !

அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்தபோது அவருக்கு பெரும் பாதுகாப்பு வழங்கப்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

15 அமெரிக்க விமானங்கள்,, 7 தைவான் விமானங்கள்.. அமெரிக்க சபாநாயகர் பாதுகாப்புக்கு அணிவகுத்த விமானப்படை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இரண்டாம் உலகப் போரின்போது , சீனாவை ஆண்டு வந்த கோமிங்டாங் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் கோமிங்டாங் கட்சியை அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரித்த நிலையில், மக்கள் ஆதரவு காரணமாக அந்த போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது.

கம்யூனிஸ்டுகளின் இந்த வெற்றியைத் தொடர்ந்து கோமிங்டாங் கட்சியின் தலைவர் சியாங் காய்-ஷேக் தலைமையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சீனாவுக்கு அருகில் இருந்த தைவானுக்கு தப்பிச்சென்றனர். தொடர்ந்து நாங்கள்தான் உண்மையான சீனா என கோமிங்டாங் கட்சியினர் கூறிக்கொள்ள, சீனாவின் 90% நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களே உண்மையான சீனா என்று கூறியது.

Chiang Kai-shek , mavo
Chiang Kai-shek , mavo

ஆரம்பத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் தைவானை உண்மையான சீனா என அங்கீகரித்த நிலையில், காலால் செல்ல செல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீனாவை அங்கீகரிக்க தொடங்கின. தற்போதைய நிலையில், தைவானை உலகின் 14 நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா கூட இன்னும் தைவானை அங்கீகரிக்கவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் மிக மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றார். அவர் வருகைக்கு சீனா கண்டும் கண்டனம் தெரிவித்தது. ஆனாலும் அதை மீறி அவர் தைவான் சென்றார். அவர் சென்ற போயிங் விமானத்தில் அவரோடு 5 பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

15 அமெரிக்க விமானங்கள்,, 7 தைவான் விமானங்கள்.. அமெரிக்க சபாநாயகர் பாதுகாப்புக்கு அணிவகுத்த விமானப்படை !

அப்போது அவர் விமானத்துக்கு பாதுகாப்பாக 15 அமெரிக்க ராணுவ விமானங்கள் சென்றுள்ளன. இவர்கள் சென்ற விமானம் தென்சீன கடலில் பறந்தால் சீனாவால் சுட்டு வீழ்த்த முடியும் என்பதால் இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் வழியாக தைவான் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன.

தைவான் வான் எல்லைக்குள் நுழைந்ததும், அங்கு தைவான் நாட்டின் விமானப்படையை சேர்ந்த 8 மிராஜ் 2000 ரக விமானங்கள் பெலோசியின் விமானத்துக்கு பாதுகாப்பாக அணிவகுத்து அவர் தரைஇறங்கும் வரை உடன் வந்துள்ளன. அதேநேரம் நான்சி பெலோசி தைவானில் தரையிறங்கியதும் 21 சீனா விமானங்கள் தைவானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்துள்ளன.

15 அமெரிக்க விமானங்கள்,, 7 தைவான் விமானங்கள்.. அமெரிக்க சபாநாயகர் பாதுகாப்புக்கு அணிவகுத்த விமானப்படை !

இதன் பின்னரும் போர் நடவடிக்கையை சீனா நிறுத்தவில்லை. தைவானை சுற்றி ஏவுகணைகளை நிறுத்திய சீனா அந்த பகுதியில் போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இது அந்த பிராந்தியத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுக்கும் தைவானுக்கும் சமீப காலமாக நல்லுறவு அதிகரித்த நிலையில், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையால் இரு நாடுகளுக்கு இடையிலும் மோதல் அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories