உலகம்

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் DSP.. 1 மதிப்பெண்ணில் மாறிய வாழ்க்கை ! பின்னணி என்ன ?

பாகிஸ்தானில் ரூபேட்டா என்ற பெண் நாட்டின் முதல் இந்து பெண் டி.எஸ்.பி ஆக பதவி ஏற்றுள்ளார்.

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் DSP.. 1 மதிப்பெண்ணில் மாறிய வாழ்க்கை ! பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்படுவது அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் அங்கு சிறுபான்மையாக இருக்கும் இந்துக்கள் அரசு துறையில் மிக குறைவாகவே இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அங்கு மனிஷா ரூபேட்டா என்ற ஹிந்து பெண் நாட்டின் முதல் இந்து பெண் டி.எஸ்.பி ஆக பதவி ஏற்றுள்ளார். இந்த அந்த நாட்டின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் DSP.. 1 மதிப்பெண்ணில் மாறிய வாழ்க்கை ! பின்னணி என்ன ?

13 வயதில் தந்தையை இழந்த மனிஷா ரூபேட்டாவின் குடும்பம் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாகோபாத் என்ற இடத்தில் இருந்து கராச்சிக்கு குடியேறியுள்ளது. 3 சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர்.

இவரின் சகோதரிகள் தற்போது மருத்துவராக உள்ள நிலையில் தம்பியும் மருத்துவம் பயின்று வருகிறார். சகோதரிகள் போல மருத்துவம் படிக்க விரும்பிய இவர், மருத்துவம் படிப்பதற்காக நுழைவு தேர்வு எழுதிய நிலையில் 1 மதிப்பெண் வித்தியாசத்தில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முதல் இந்து பெண் DSP.. 1 மதிப்பெண்ணில் மாறிய வாழ்க்கை ! பின்னணி என்ன ?

பின்னர் போலீஸ் துறையில் உயர் பதவிக்கான தேர்வை எழுதிய இவர், 468 பேரில் 16-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து சிந்து மாகாணத்தின் துணை போலீஸ் சூப்பிரண்டாக அவர் தேர்வாகியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories