உலகம்

‘உம்மனா’மூஞ்சி.. விஞ்ஞானிகளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பிம்பங்கள் என்ன?

ஹாக்கிங்தான் ஜாலி பேர்வழி என்றால் ஐன்ஸ்டீன் எப்படியானவர் தெரியுமா?

‘உம்மனா’மூஞ்சி.. விஞ்ஞானிகளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பிம்பங்கள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

சீரியஸ்ஸான ஆட்கள். அல்லது புத்தகப் புழுக்கள். இல்லையெனில் ஏதேனும் பைத்தியக்காரத்தனமாக செய்பவர்கள். தலையைச் சீவ மாட்டார்கள். இயல்பு வாழ்க்கைக்குள் இருக்க மாட்டார்கள். எப்போதும் ஏதோவொரு சிந்தனையுடனேயே இருப்பவர்கள். ‘சிடுசிடு’வென இருப்பவர்கள். கோபக்காரர்கள். இவை யாவும் விஞ்ஞானிகளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் சில பிம்பங்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? விஞ்ஞானிகளில் பலர் பயங்கர சுவாரஸ்யங்களைக் கொண்டவர்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். ஐன்ஸ்டீன் புகைப்படக் கேமராக்களைப் பார்த்து நாக்கை நீட்டி ‘போஸ்’ கொடுத்தது ஓர் உதாரணம். ஐன்ஸ்டீனைப் போலவே இன்னொருவரும் இருக்கிறார்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்!

அறிவியல்பூர்வமான விஷயங்களை அவர் அணுகி விளக்கும் கோணமே சுவாரஸ்யமாக இருக்கும். உதாரணமாக மனிதனின் பண்பை,

'என்னை ஒரு சிறு பழக்கொட்டையின் ஓட்டுக்குள் அடைத்து வைத்தாலும், பிரபஞ்ச வெளியின் சக்கரவர்த்தியாகவே என்னை நான் கருதிக் கொள்ளுவேன்' என்ற ஷேக்ஸ்பியரின் சொல்லாடலைக் கொண்டு விளக்குகிறார்.

‘உம்மனா’மூஞ்சி.. விஞ்ஞானிகளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பிம்பங்கள் என்ன?

ஹாக்கிங்தான் ஜாலி பேர்வழி என்றால் ஐன்ஸ்டீன் எப்படியானவர் தெரியுமா?

'ஒளியைவிட வேகமாகப் பயணித்த ஒய்யாரப் பெண்ணொருத்தி இருந்தாள் ஓரிடத்திற்குப் புறப்பட்டாள் இன்று ஒயிலாய் அங்குச் சென்றடைந்தாள் நேற்று' எனக் காலப்பயணத்தை விளக்கக் கவிதை சொன்னவர் ஐன்ஸ்டீன்.

மனித குலத்துக்கு பெரும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் இருக்கும் என்கிறார் ஹாக்கிங். செயற்கை நுண்ணறிவு (AI) பெரும் சவாலாக மனித குல எதிர்காலத்துக்கு இருக்கும் எனவும் கணிக்கிறார். செயற்கை நுண்ணறிவு என்றதும் டெர்மினேட்டர் பட அளவுக்கு யோசிக்க வேண்டாம்.இப்போதே மனித உழைப்புக்கு பதிலாக automation-க்கு நிறுவனங்கள் நகர்ந்து நம் பொருளாதாரம் கேள்விக்குறி ஆவது ஒரு வகை செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம்தான்.

‘உம்மனா’மூஞ்சி.. விஞ்ஞானிகளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பிம்பங்கள் என்ன?

Black holes பற்றிய ஆய்வுகளில் அதிகமாக ஹாக்கிங் ஈடுபட்டிருந்தார். கருந்துளை பற்றிய கருதுகோள்கள் அவருக்கு பிடிபடவே இல்லை. எந்த ஒரு இயக்கத்துக்கும் விசை இருக்க வேண்டும்தானே! கருந்துளை ஆராய்ச்சிக்கு தனக்குத்தானே விசை கொடுத்துக்கொண்டார் ஹாக்கிங். ’கருந்துளைகள் இருக்கிறது’ என ஆராய்ந்து கூறிய சக அறிவியலாளர் Kip Thorne-டன் பந்தயம் கட்டினார் கருந்துளைகள் இல்லையென நிரூபிப்பதாக. பந்தயம் வெல்வதற்காக பல ஆய்வுகள் செய்தார். தேற்றங்கள் இயற்றினார். இறுதியில் கருந்துளைகள் பிரபஞ்சத்தில் இருப்பதாக ஒப்புக்கொண்டு பந்தயத்தில் தோற்றதாக அறிவித்தார்.

‘உம்மனா’மூஞ்சி.. விஞ்ஞானிகளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பிம்பங்கள் என்ன?

ஹைலைட்டாக கடவுளையும் காலத்தையும் (Time) வைத்து ஒரு விஷயம் சொல்கிறார் ஹாக்கிங்.

'பெருவெடிப்பிலிருந்துதான் (Big Bang) காலம் (Time) உருவானது. எனவே பெருவெடிப்புக்கு முன் எதுவும் இருந்திருக்காது' என சொல்லிவிட்டு கடவுள் பற்றிய கேள்விக்கு ஒரு குட்டு வைக்கிறார் மனுஷன்:

"பெருவெடிப்புக்கு முன் கடவுளுக்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில் அப்போது பிரபஞ்சத்தை உருவாக்கக் கடவுளுக்கு நேரம் (Time) இருந்திருக்காது!"

விஞ்ஞானமே ஜாலியான விஷயம் என்கிறபோது, விஞ்ஞானிகள் மட்டும் எப்படி ‘உம்மனா’மூஞ்சிகளாக இருப்பார்கள்?

banner

Related Stories

Related Stories