உலகம்

Profile Picture-க்கும் இனி Privacy.. புதிய Update-களை அள்ளிக்கொடுத்த Whatsapp நிறுவனம்!

பாதுகாப்பு காரணமாக வாட்ஸ் அப் நிறுவனம், நாள்தோறும் தனது அப்டேட்களை அள்ளி வழங்கி வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Profile Picture-க்கும் இனி Privacy.. புதிய Update-களை அள்ளிக்கொடுத்த Whatsapp நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக முன்னிலையில் இருப்பது வாட்ஸ் அப். இந்த செயலியானது தற்போது 'Meta' வசம் சென்ற பிறகு அடிக்கடி பல்வேறு அப்டேட்களை அள்ளிக்கொடுக்கிறது.

Profile Picture-க்கும் இனி Privacy.. புதிய Update-களை அள்ளிக்கொடுத்த Whatsapp நிறுவனம்!

அந்த வகையில், தற்போது Privacy Setting-ல் புது அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி Privacy Setting-ல் பயனர்கள் தங்களை குறித்த விவரங்களை மறைத்து வைத்துக்கொள்ள உதவும் என வாட்ஸ் அப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதன்படி, வாட்ஸ் அப் Privacy-ல் Last Seen, Status, About போன்றவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது DP என்று சொல்லப்படுகிற வாட்ஸ் அப் Display Picture (Profile Picture)-ஐ விருப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம். மேலும் புதிய வாட்ஸ் அப் குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றிற்கும் Privacy கட்டுப்பாட்டு வசதியை வழங்கியுள்ளது meta நிறுவனம்.

இதன் மூலம் வாட்ஸ் அப்பில் வைக்கப்படும் Status-ஐ எப்படி முக்கியமானவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்க முடிகிறதோ, அது போல் இனி profile picture-ஐயும் வைக்க முடியும்.

banner

Related Stories

Related Stories