உலகம்

ரகசிய வீடியோ இருந்த இம்ரான்கானின் 2 செல்போன்கள் திருட்டு.. புதினுக்கு தடை விதித்த கனடா! #5IN1_WORLD

இம்ரான்கான் வீடியோ பதிவு செய்து வைத்திருந்த 2 செல்போன்கள் திருடுபோனதாக அவரது முன்னாள் உதவியாளர் ஷாபாஸ் கில் தெரிவித்துள்ளார்.

ரகசிய வீடியோ இருந்த இம்ரான்கானின் 2 செல்போன்கள் திருட்டு.. புதினுக்கு தடை விதித்த கனடா! #5IN1_WORLD
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) இம்ரான்கானின் 2 செல்போன்கள் திருட்டு!

இம்ரான்கான் வீடியோ பதிவு செய்து வைத்திருந்த செல்போன் உள்பட அவரின் 2 செல்போன்கள் திருடுபோனதாக அவரது முன்னாள் உதவியாளர் ஷாபாஸ் கில் தெரிவித்துள்ளார். இம்ரான்கான் சியால்கோட் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு இஸ்லாமாபாத் திரும்புவதற்காக சியால்கோட் விமான நிலையத்துக்கு வந்தபோது அவரின் 2 செல்போன்கள் திருடப்பட்டதாக ஷாபாஸ் கில் கூறினார். "நான் எனது செல்போனில் ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளேன். அந்த வீடியோவில் நான் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன். நான் கொல்லப்பட்டால், அந்த வீடியோ பகிரங்கமாக வெளியிடப்படும்'' என்று இம்ரான் கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரகசிய வீடியோ இருந்த இம்ரான்கானின் 2 செல்போன்கள் திருட்டு.. புதினுக்கு தடை விதித்த கனடா! #5IN1_WORLD

2) கனடாவில் நுழைய ரஷிய அதிபர் புதினுக்கு தடை!

ரஷிய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை கனடா அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. "புதின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது ரஷியாவை அதன் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும்" என்று அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரி மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.

3) சீனா 132 பேர் விமான விபத்து!

சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் இருந்த இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விமானத்தின் கருப்பு பெட்டி சேகரித்த தகவவல்களை அமெரிக்க புலனாய்வு வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். அதன்படி விமானி அறையில் இருந்த யாரோ தான் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிவித்து ள்ளனர்.

ரகசிய வீடியோ இருந்த இம்ரான்கானின் 2 செல்போன்கள் திருட்டு.. புதினுக்கு தடை விதித்த கனடா! #5IN1_WORLD

4) இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி!

பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை பாராளுமன்றம் கூடியபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மந்திரன் கொண்டு வந்த தீர்மானத்தை 68 பேர் ஆதரித்த நிலையில், 119 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால், இலங்கை அதிபர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்கலாமா என்ற வாக்கெடுப்பில் ஆளும் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளது.

5) ரஷியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை!

பிரான்சில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். ரஷியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த தற்போது புதிய சார்லி சாப்ளின் தேவை. சினிமா எப்போதும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். இன்றும் சினிமா ஊமையாக இல்லை என்பதை நிரூபிக்க புதிய சாப்ளின் தேவை என்றாா்.

banner

Related Stories

Related Stories