உலகம்

வடகொரியாவில் மர்ம காய்ச்சலால் 3 லட்சம் பேர் பாதிப்பு.. 21 பேர் பலி: மர்ம தேசத்தில் நடப்பது என்ன?

வடகொரியாவில் மர்ம காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவில் மர்ம காய்ச்சலால் 3 லட்சம் பேர் பாதிப்பு.. 21 பேர் பலி: மர்ம தேசத்தில் நடப்பது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!

மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “அமைதியாக நடந்த போராட்டத்தில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, எம்.பி.க்களான ஜான்சன் பெர்னாண்டோ, சஞ்சீவா எதிர்மான்னே, சனத் நிஷாந்தா, மொரட்டுவா மாநகர சபை தலைவர் சமன்லால் பெர்னாண்டோ, மூத்த போலீஸ் அதிகாரிகள் தேசபந்து தென்னசோன், சந்தனா விக்ரமரத்னே ஆகியோரை போலீசார் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு வருகிற 17-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

வடகொரியாவில் மர்ம காய்ச்சலால் 3 லட்சம் பேர் பாதிப்பு.. 21 பேர் பலி: மர்ம தேசத்தில் நடப்பது என்ன?

2) நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி!

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், இதனால் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது சிறப்பாக நிர்வாகம் செய்து, அந்நாட்டை கொரோனாவில் இருந்து மீட்டது குறிப்பிடத்தக்கது.

3) வடகொரியாவில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் 21 பேர் பலி!

மர்ம காய்ச்சல் நாடு முழுவதும் பரவியுள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது. இதற்கு 3,50,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரிய அதிபர் முக கவசம் அணிந்திருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த சூழலில், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

வடகொரியாவில் மர்ம காய்ச்சலால் 3 லட்சம் பேர் பாதிப்பு.. 21 பேர் பலி: மர்ம தேசத்தில் நடப்பது என்ன?

4) கரீபியன் தீவில் கடலில் படகு கவிழ்ந்து 11 அகதிகள் உயிரிழப்பு!

ஹைதி நாட்டை சேர்ந்த பலர் படகு ஒன்றில் கரீபியன் கடல் வழியாக அமெரிக்கா நோக்கி புறப்பட்டனர். இவர்களின் படகு கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோ அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். கடலோர காவல்படையினர் மீட்பு படகுகளில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 31 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

5) பாகிஸ்தானில் 121 டிகிரி வெயில் கொளுத்துகிறது!

பாகிஸ்தானில் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் சிந்து மாகாணத்தில் 121 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடின. வெயில் தாக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே வெயில் தாக்கம் தொடர்ந்தபடி இருக்கும் என்று பாகிஸ்தான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories