உலகம்

இப்படியா செல்போனை Unlock செய்வது.. இளம்பெண் செயலால் அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது செல்போனை எச்சில் துப்பி அன்லாக் செய்த அதிசயம் நடந்துள்ளது.

இப்படியா செல்போனை Unlock செய்வது.. இளம்பெண் செயலால் அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் உயரம் வாய்ந்த வானிலை மையம்!

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் தென்பகுதியில் 8,430 மீட்டர் உயரத்தில் வானிலை மையம் ஒன்றை அமைத்தனர். இதுவே உலக சாதனையாக இருந்தது. இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 8,830 மீட்டர் உயரத்தில் உலகின் உயரம் வாய்ந்த வானிலை மையம் ஒன்றை சீனா அமைத்துள்ளது. இந்த நிலையத்தில் இருந்து, தகவல் பரிமாற்றங்களை மேற்கொண்டு சோதனை செய்து அதிலும் சீனா வெற்றி பெற்றுள்ளது.

இப்படியா செல்போனை Unlock செய்வது.. இளம்பெண் செயலால் அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ!

மெக்டொனால்டு உணவகத்தில் காதலை வெளிப்படுத்திய நபருக்கு அதிர்ச்சி!

தென் ஆப்ரிக்காவின் ஜொகானஸ்பர்க்கில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சமீபத்தில் ஒரு நபர் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். மெக்டொனால்டு உணவகத்தில் வைத்து அந்த நபர் தனது காதலியிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து சில நிமிடம் அவரிடம் பேசிய பின்னர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இது அங்குள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கணினி உதவியுடன் அணு ஆயுத தாக்குதல் பயிற்சி நடத்திய ரஷியா

ரஷ்ய ராணுவம் கணினி உதவியுடன் கூடிய உருவகப்படுத்தப்பட்ட அணு ஆயுத ஏவுகணை தாக்குதல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ஒரே ஏவுகணை மூலமும், பலதரப்பட்ட ஏவுகணைகள் மூலமும் அணு ஆயுத தாக்குதல்களை தங்களது எதிரிகளில் நிலப்பரப்புகளின் மீது எப்படி நிகழ்த்தலாம் என கணினியின் உதவியுடன் உருவகப்படுத்தப்பட்ட காட்சி அமைப்பில் இந்த பயிற்சி நடைபெற்றது. அதேபோல தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எப்படி தடுத்து முன்னேறலாம் என்ற வகையிலும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று அணு ஆயுத தாக்குதல் மூலம் ஏற்படும் கதிர்வீச்சு மற்றும் ரசாயன ஆபத்துகளில் எப்படி செயலாற்ற வேண்டும் என்றும் ரஷியா பயிற்சி செய்தது.

கச்சா எண்ணெய் இறக்குமதி படிப்படியாக குறைக்கப்படும்!

ஐரோப்பிய யூனியன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் துணைத்தலைவர் உர்தலா லொண்டெர் லெயேன், “ரஷியா மீது 6 புதிய பொருளாதார தடைகளுக்கான திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் சம்மதிக்கும் பட்சத்தில் படிப்படியாக குறைக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்படும். இதனால் மாற்று ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சர்வதேச பண பரிவர்த்தனை அமைப்பான ஸ்விப்ட் இணைப்பில் இருந்து ரஷியாவின் 3 முக்கிய வங்கிகளை துண்டிக்க பரிந்துரைக்கப்பட உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எச்சிலால் துப்பி செல்போனை அன்லாக் செய்த இளம்பெண்; வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது செல்போனை எச்சில் துப்பி அன்லாக் செய்த அதிசயம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் வசித்து வரும் இளம்பெண் மிலா மோனட். இவர் தனது தோழிகளுடன் மதுபான விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். தனது திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் செல்போனை வெளியே எடுத்து சமதளத்தில் வைத்துள்ளார். இதன் பின்னர் அதன் கீபேடில் உள்ள ஒவ்வொரு எண்ணிலும் சரியாக எச்சிலை துப்ப தொடங்குகிறார். இதுபோன்று 6 வெவ்வேறு எண்களின் மீது துப்பியதும் செல்போன் அன்லாக் ஆகிறது. இதனை வீடியோவாக எடுத்து மற்றொருவர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories