உலகம்

நேருக்கு நேராக அமெரிக்க அதிபரை கலாய்த்த காமெடியன்.. ஜோ பைடன் செய்த காரியம் என்ன தெரியுமா?

நைஜீரியாவின் லாகோஸ் மாநிலத்தின் ஓனிக்போ பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேருக்கு நேராக அமெரிக்க அதிபரை  கலாய்த்த காமெடியன்.. ஜோ பைடன்  செய்த காரியம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உக்ரைனில் இரும்பு ஆலைக்குள் இருந்து வெளியேறும் மக்கள்!

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 68 நாட்களாக நீடித்து வருகிறது. மரியுபோலில் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் மிகப் பெரிய இரும்பு தொழிற் சாலை இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் இருக்கிறார்கள். அவர்களை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது. இதுவரை சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த இரும்பு தொழிற்சாலைக்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய வீரர்களை தாக்கி வருகிறார்கள். அவர்களை சரணடையுமாறு ரஷியா எச்சரித்தது. உக்ரைன் வீரர்கள் சரணடைய மறுப்பதால் அங்கு தீவிர சண்டை நடந்து வருகிறது.

நேருக்கு நேராக அமெரிக்க அதிபரை  கலாய்த்த காமெடியன்.. ஜோ பைடன்  செய்த காரியம் என்ன தெரியுமா?

ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்!

உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வேல்ஸ் ஆன்லைன் என்ற இணையதளம் கூறுகையில், இந்த பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் 14 கோடி விலையை கொண்டது. அதிக விலைக்கு விற்கப்படும் விஸ்கி என்ற உலக சாதனையை இந்த பாட்டில் படைத்துள்ளது. கடந்த வருடம் கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இந்த பாட்டில் இடம்பிடித்தது. இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன் இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் சவுதி அரேபியா!

பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு அந்த நாட்டின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்கு உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தார். இந்நிலையில் பணப்பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பாகிஸ்தானுக்கான எண்ணெய் நிதியை 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2.4 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்க பாகிஸ்தான் முன்மொழிந்ததாகவும், அதை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேருக்கு நேராக அமெரிக்க அதிபரை  கலாய்த்த காமெடியன்.. ஜோ பைடன்  செய்த காரியம் என்ன தெரியுமா?

அமெரிக்க அதிபரை மேடையில் வைத்து கலாய்த்த காமெடி நடிகர்!

ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல காமெடியன் டிரிவோர் நோவா வெள்ளை மாளிகை விருந்து ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அமெரிக்காவை நினைத்து பாருங்கள், நாம் எல்லோரும் சுதந்திரமாக இருக்கிறோம். நம் நாட்டில் உங்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருப்பதாக தோணலாம் ஆனால் நம்மால் வேண்டுமான விஷயங்களை செய்ய முடியும். அமெரிக்க அதிபரை கூட நான் கலாய்த்து விட்டு அமைதியாக போய்விட முடியும். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என கூறினார். பின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பார்த்து நான் உங்களை கலாய்த்ததற்கு எதுவும் செய்ய மாட்டீர்கள் தானே என கிண்டலாக அவரை பார்த்து டிரேவர் நோவா கேட்டார். அதன்பின் பேசிய ஜோ பைடன் டிரேவர் நோவாவை பார்த்து, “டிரேவருக்கு ஒரு நல்ல செய்தி. அமெரிக்காவில் நீங்கள் அந்நாட்டு அதிபரை கூட கலாய்க்க முடியும். அதற்காக மாஸ்கோவில் உள்ளது போல உங்களை சிறையில் அடைக்க மாட்டார்கள்” என கூறினார்.

நைஜீரியாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 8 பேர் பலி!

நைஜீரியாவின் லாகோஸ் மாநிலத்தின் ஓனிக்போ பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் மீட்புப் பணி நடைபெற்றது. மீட்புப் படையினர் இதுவரை 8 பேரின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர். மேலும் 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேடுவதற்கான மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நைஜீரியாவில் இதுபோன்று கட்டிடங்கள் இடிந்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. பழைய கட்டிடங்கள், சரியான திட்டமிடல் இல்லாதது, விதிமுறைகளை மீறிய கட்டுமானம் மற்றும் கட்டுமானத்தின் போது தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றின் காரணமாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

banner

Related Stories

Related Stories