உலகம்

20 நாட்களில் 2 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்.. ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி! #5IN1_WORLD

ஸ்பெயின் நாட்டில் சுகாதாரப் பணியாளராக பணியாற்றி வரும் 31 வயதான பெண் ஒருவர் 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 நாட்களில் 2 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்.. ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி! #5IN1_WORLD
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) முன்னாள் அமைச்சர்கள் விமானத்தில் பயணிக்க தடை!

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்களை ‘விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர்’ பட்டியலில் சேர்க்குமாறு ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதே சமயத்தில், முந்தைய அரசு பிறப்பித்த ‘‘வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவோர்’’ பட்டியலில் இருந்து ஷபாஸ் ஷெரீப் உள்பட தற்போதைய மந்திரிகளின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2) 20 நாட்களில் 2 முறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்!

ஸ்பெயின் நாட்டில் சுகாதார பணியாளராக பணியாற்றி வரும் 31 வயதான பெண் ஒருவர் 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நபருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரை அறியப்பட்ட குறைந்தபட்ச கால இடைவெளி இதுவே என்று ஸ்பெயினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா வைரஸும், ஜனவரியில் ஒமிக்ரான் வைரஸும் அந்த பெண்ணை பாதித்துள்ளது.

20 நாட்களில் 2 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்.. ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி! #5IN1_WORLD

3) ஸ்வீடன், பின்லாந்துக்கு கனடா ஆதரவளிக்கும்: ஜஸ்டின் ட்ரூடோ

நேட்டோவில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்தைச் சுற்றி உரையாடல்கள் நடைபெற்று வருகிறது, கனடா நிச்சயமாக இரு நாடுகளுக்கும் ஆதவினை அளிக்கும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். நேட்டோ இராணுவக் கூட்டணியில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றன. இதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.

4) உக்ரைனுக்கு இன்னும் சில தினங்களில் கனரக ஆயுதங்கள் வழங்கப்படும் - ஜெர்மனி

அடுத்த சில நாட்களில் உக்ரைனுக்கு ஒரு புதிய கனரக ஆயுதங்களை வழங்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஜெர்மனி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், உக்ரைனின் ராணுவத்துக்கு பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் நீடிக்கும் வகையில், நீண்டகால ஆதரவை வழங்க ஜெர்மனி உறுதிபூண்டுள்ளதாக ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும், ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ‘பேண்சர்ஹாபிட்ஸ்-2000 டாங்கிகள்' இயக்குவதற்கு உக்ரேனிய வீரர்களுக்கு ஜெர்மனி பயிற்சி அளிக்கும் என்றார். இந்த டாங்கிகள் தற்போது போதுமான அள்வில் ஜெர்மனியிடம் கையிருப்பு இல்லாததால் நெதர்லாந்தால் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

20 நாட்களில் 2 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்.. ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி! #5IN1_WORLD
Sean Rayford

5) கொலம்பியா நாட்டில் பயங்கரம்: குண்டு வெடிப்பில் 6 ராணுவ வீரர்கள் பலி

கொலம்பியா நாட்டில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். கொலம்பியா நாட்டில் வடமேற்கில் உள்ள ஆண்டியோகுயா மாகாணத்தில், ஒரு லாரியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள கிராமப்புறத்தில் அவர்களது லாரி சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டின் மீது ஏறியதால், குண்டு வெடித்து லாரி உருக்குலைந்து போனது. இந்த குண்டுவெடிப்பில் 6 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதலின் பின்னணியில், வளைகுடா கிரிமினல் கும்பல் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories