உலகம்

“ஒரே குத்து.. கொட்டிய ரத்தம்” : சக பயணியின் முகத்தை உடைத்த மைக் டைசன் - நடந்தது என்ன?

விமானத்தில் பயணி ஒருவரைத் தாக்கும் மைக் டைசன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரே குத்து.. கொட்டிய ரத்தம்” : சக பயணியின் முகத்தை உடைத்த மைக் டைசன் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குத்துச்சண்டையில் ஜாம்பவானாக கருதப்படுபவர் மைக் டைசன். இவரின் ஆக்ரோஷமான விளையாட்டால், சக போட்டியாளர்கள் இவரிம் சண்டைபோட பயப்படுவார்கள். அந்த அளவிற்கு இவரின் ஒவ்வொரு குத்தும் பலமாக இருக்கும்.

1997ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் எதிர் போட்டியாளரின் காதைக் கடித்து விதிகளை மீறினார். பிறகு பாலியல் வன்கொடுமை, போதை பொருள் பயன்படுத்தியது என தொடர்ந்து சர்ச்சைகளை சிக்கி, குத்துச்சண்டையில் பெற்ற தனது புகழை ஒரேயடியாக இழந்தார்.

எந்த அளவிற்கு குத்துச்சடையில் புகழ் பெற்றாரோ அதே அளவிற்கு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் மைக் டைசன். தற்போது கூட விமானத்தில் சக பயணி ஒருவரை தாக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புளோரிடாவிற்கு விமானம் மூலம் பயணம் செய்துள்ளார் மைக் டைசன். இவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் இவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மைக் டைசன், அவரது முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் இளைஞரின் முகத்தில் இருந்து ரத்தம் கசித்துள்ளது. இந்தச் சம்பவத்தை விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மைக் டைசனின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விமான அதிகாரிகளும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories