உலகம்

போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்திய ராப் பாடகர் மயங்கி விழுந்து மரணம்.. வைரலாகும் கடைசி பாடல்!

இலங்கை அதிபருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராப் பாடகர், போராட்டக் களத்திலேயே உயிரிழந்துள்ளார்.

போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்திய ராப் பாடகர் மயங்கி விழுந்து மரணம்.. வைரலாகும் கடைசி பாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராப் பாடகர், போராட்டக் களத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கையில் இருந்து அந்நாட்டு மக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். இந்நிலைக்குக் காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ராப் பாடகர் ஷிராஸ், பாப் மார்லியின் ‘Get up, stand up’ பாடலை பாடி போராட்டகாரர்களை உற்சாகப்படுத்தினார்.

பாடல் பாடியபோது, மயங்கி விழுந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் போராட்டக் களத்திலேயே பாடகர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயங்கி விழுவதற்கு முன்பாக ஷிராஸ் பாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories