உலகம்

ஒரு வடை ரூ.120.. ஒருவேளை உணவுக்கே திண்டாடும் இலங்கை மக்கள்.. என்ன செய்ய காத்திருக்கிறார் கோட்டாபய?

இலங்கையில் ஒரு வடை ரூ.120க்கு விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வடை ரூ.120.. ஒருவேளை உணவுக்கே திண்டாடும் இலங்கை மக்கள்.. என்ன செய்ய காத்திருக்கிறார் கோட்டாபய?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இலங்கையின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பெரிய வருவாய் என்றால் அது சுற்றுலாத்துறைதான். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நீடித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதனால், அந்நிய செலாவணி இருப்பு வெகுவாகக் குறைந்ததால் ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்துவிட்டது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செல்வதில் அந்நாட்டிற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை ரூ.5,000, சர்க்கரையின் விலை ரூ.230, வெங்காயத்தின் விலை ரூ.450, பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.1000, என தினந்தோறும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

மேலும் அரிசி ஒரு கிலோ ரூ.448க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.263க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு முட்டை ரூ.28க்கும் ஒரு ஆப்பிள் ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கடைகளில் ஒரு கிளாஸ் டீ ரூ.100க்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையில் ஒரு வேளை உணவு சாப்பிடுவதற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்நிலையில் இலங்கையின், ஜாப்னா நகரத்தில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் ஒரு வடை ரூ.120க்கும், ஒரு டீ.100 க்கும் விற்கப்படுவது உலகநாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வடை ரூ.120.. ஒருவேளை உணவுக்கே திண்டாடும் இலங்கை மக்கள்.. என்ன செய்ய காத்திருக்கிறார் கோட்டாபய?

இந்நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் 2 டீ, மற்றும் 2 வடை சாப்பிட்ட நபர் ஒருவர் ரூ.400 கட்டணம் செலுத்தியுள்ளார். இதற்கான பில்லை சமூக வலைதளத்தை பதிவிட்டுள்ளார். அதில் 2 வடைக்கு ரூ.240ம், 2 டீக்கு ரூ.200ம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த பில்லை அந்த நபர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இலங்கையில் ஒருவேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லா சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் சிலர் கடல் வழியாகத் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து வருகிறனர். மேலும் பொருளாதார பிரச்சனையைச் சரி செய்ய அண்டை நாடுகளிடம் இலங்கை அரசு நிதி உதவி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories